தென் கொரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான சம்சங் தங்களது டிவிட்டர் பதிவை ஐபோன் மூலம் செய்தது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
சாம்சங் மற்றும் ஐபோன் நிறுவனங்கள் இரண்டும் இரு துருவங்கள். இவற்றுக்கு இடையிலான போட்டியும் சந்தையும் மிகப் பெரியது. ஆனால் அன்மையில் நைஜீரிய சாம்சங்-ன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் காலக்ஸி நோட் 8 குறித்த டிவிட்டர் பதிவு ஐபோன் மூலம் செய்யப்பட்டது இணையதளத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.
இந்த டிவிட்டர் பதிவு போடப்பட்ட நில நிமிடங்களில் டிட்ரெண்ட் ஆன நிலையில் அந்தக் கணக்கினை சாம்சங் மூடியது மட்டும் இல்லாமல் அந்த டிவிட்டையும் நீக்கிவிட்டது.
ஆனால் சாம்சங் நிறுவனத்தின் அந்த டிவிட்டர் பதிவினை சமுக வலைத்தளத்தில் படமாகப் பிடித்து பகிர்ந்த ஒருவர் கண்டிப்பாக நாளை ஒருவருக்கு வேலைப் போவது நிச்சயம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Published by:Veeramani Panneerselvam
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.