புதிய சிஇஓ-வை அறிமுகம் செய்த வால்மார்ட் இந்தியா... ஆறே மாதங்களில் பதவி உயர்வு பெற்ற சமீர்!

லண்டன் பிசினஸ் ஸ்கூல் பட்டதாரியான சமீர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

புதிய சிஇஓ-வை அறிமுகம் செய்த வால்மார்ட் இந்தியா... ஆறே மாதங்களில் பதவி உயர்வு பெற்ற சமீர்!
வால்மார்ட்
  • Share this:
வால்மார்ட் இந்தியா-வுக்கு புதிய சிஇஓ ஆக சமீர் அகர்வால் நியமிக்கப்பெற்றுள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற சமீர் அகர்வால் மிக விரைவாகப் பதவி உயர்வு பெற்று தற்போது சிஇஓ ஆகியுள்ளார்.

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் சிஇஓ பொறுப்பில் அதிகாரப்பூர்வமாகப் பதவி ஏற்கிறார் சமீர் அகர்வால். வால்மார்ட் இந்தியா நிறுவனத்தில் கீழ் இந்தியாவில் மொத்தம் 28 மொத்தவிலை ஸ்டோர்கள் செயல்படுகின்றன. இவை அனைத்தும் ‘பெஸ்ட் ப்ரைஸ்’ என்ற ப்ராண்ட் முகவரியின் கீழ் இயங்குகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனம் இந்தியாவினுள் கடந்த 2007-ம் ஆண்டு கால் பதித்தது. இந்திய நிறுவனமான ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தின் அதிகப்படியான பங்குகள் வால்மார்ட் வசம் உள்ளன.


லண்டன் பிசினஸ் ஸ்கூல் பட்டதாரியான சமீர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பங்கு வர்த்தகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் வால்மார்ட் நிறுவன பங்குகள் எவ்வித வீழ்ச்சியையும் பெரிய அளவில் சந்திக்கவில்லை.

பங்குதாரர்கள் மத்தியில் வால்மார்ட் பங்குகள் மீதான எதிர்பார்ப்பு எப்போதும் குறையாது என்றே பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் வால்மார்ட் இந்தியாவுக்கான புதிய சிஇஓ நியமனம் பங்குவர்த்தகத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வணிகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.

மேலும் பார்க்க: பணி ஓய்வு பெற்ற இண்டஸ்இண்ட் வங்கி சிஇஓ... வீழ்ந்த பங்குகள்..!
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்