முகப்பு /செய்தி /வணிகம் / மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை கொடுத்தால் சீல் தான்.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

மருந்து சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரை கொடுத்தால் சீல் தான்.. தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

சில்லறை மற்றும் மொத்த மருந்துக் கடைகளில் தொடா்ச்சியாக திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மன நோய் மற்றும் தூக்கத்திற்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் வரும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மனநோய் மற்றும் தக்க மருந்துகள் தவறான பயன்பாட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்துக் கடைகளில் தொடா்ச்சியாக திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த சோதனைகளின் போது சென்னை, பெருங்குடி திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகளை பெருமளவில் வாங்கி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த மருந்து கடைக்கு கொட்டிவாக்கம் சரக மருந்துகள் ஆய்வாளரால் பெருங்குடி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அக்கடையின் மீது சட்ட நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக அம்மருந்துக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மன நோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Medicines, Sleep