ஹோம் /நியூஸ் /வணிகம் /

புதிய தொழிலாளர் நல சட்டங்களில் ஊதிய விகிதம், பணி நேரம், விடுப்பு போன்ற விதிகளில் விரைவில் மாற்றம்

புதிய தொழிலாளர் நல சட்டங்களில் ஊதிய விகிதம், பணி நேரம், விடுப்பு போன்ற விதிகளில் விரைவில் மாற்றம்

ஊழியர்கள்

ஊழியர்கள்

பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 கொள்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நிறுவனங்களும், ஊழியர்களுக்கும் இடையே பன்னெடுங்காலமாக உள்ள விதிமுறைகளில் சீர்திருத்தம் செய்யும் வகையில் இந்த முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

பல மாதங்கள் பரிசீலனை செய்த பிறகு தொழிலாளர் நலன் தொடர்பான 4 கொள்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நிறுவனங்களும், ஊழியர்களுக்கும் இடையே பன்னெடுங்காலமாக உள்ள விதிமுறைகளில் சீர்திருத்தம் செய்யும் வகையில் இந்த முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது.

புதிய தொழிலாளர் நல கொள்கைகளில் எண்ணற்ற மாற்றங்கள் இடம்பெற உள்ளன. குறிப்பாக, ஊழியர்களின் ஊதியம், அவர்கள் பிஎஃப் திட்டத்துக்கு வழங்கும் பங்களிப்பு, பணி நேரம் போன்றவற்றில் மாற்றம் நடைபெற இருக்கிறது.

ஊழியர்களின் பணிச்சூழல், தொழிலாளர் நலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட உள்ளன. இந்தச் சட்டங்கள் அமலுக்கு வரும் பட்சத்தில், நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் அதிக நன்மைகள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர் நலக் கொள்கைகளில் இடம்பெறும் மாற்றங்கள்

தொழிலாளர் நல சட்டங்களில் இடம்பெற உள்ள முக்கிய திருத்தம் என்னவென்றால் பணி நாட்கள் தான். புதிய விதிகள் அமலுக்கு வந்தவுடன், தொழிலாளர்களுக்கு 5 நாட்களுக்குப் பதிலாக 4 வேலை நாட்கள் என்ற முறையை நிறுவனங்கள் அமல்படுத்த முடியும். அதாவது, 3 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும். ஆனால், இதில் ஒரு நிபந்தனை உண்டு.

வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் 8 மணி நேர பணிக்குப் பதிலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு தொழில் நிறுவனத்திற்கும் இந்த விதிமுறை பொருந்தும். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்கனவே அமலில் உள்ள விதிமுறைகளை பொருத்து இது மாறும்.

பிஎஃப் பங்களிப்பு மற்றும் டேக் ஹோம் சேலரி

ஊழியர்களுக்கு அனைத்து பிடித்தமும் போக கைக்கு கிடைக்கும் ஊதியம் மற்றும் பிஎஃப் திட்டத்துக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பு போன்றவற்றிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. நிகர ஊதியத்தில் 50 சதவீதம் அளவுக்கான அடிப்படை ஊதியம் இருக்க வேண்டும் என்று புதிய கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இதன் மூலமாக பிஎஃப் திட்டத்துக்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும். இதனால், ஊழியர்களுக்கு கைகளில் கிடைக்கும் ஊதியம் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், ஓய்வுபெறும் போது கிடைக்கும் பிஎஃப் தொகை மிக அதிகமாக இருக்கும்.

Also see... உங்கள் பெயரை மாற்றம் செய்வதால் உங்களுடைய சொத்து விற்பனை உரிமை பாதிக்கப்படுமா?

ஆண்டு விடுப்புகள்

தனது பணிக் காலத்தில் ஊழியர் எடுக்கும் விடுப்புகள் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஓராண்டில் எஞ்சியிருக்கும் விடுப்பு நாட்களை அடுத்த பணி ஆண்டில் சேர்த்துக் கொள்வது, அதிக விடுப்பு பெறுவது போன்ற தளர்வுகள் செய்யப்பட உள்ளன.

சேவை துறையில் வொர்க் ஃபிரம் ஹோம் கலாசாரத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால், ஓராண்டில் 180 நாட்கள் பணி செய்திருந்தாலே புதிய ஊழியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்டு, இனி அது 240 நாட்கள் என திருத்தம் செய்யப்பட உள்ளது.

எந்தெந்த மாநிலங்களில் அமல்

உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பீகார், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த வரைவு கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன.

First published:

Tags: Chennai Corporation worker