முகப்பு /செய்தி /வணிகம் / 2023இல் இந்தியாவில் தொழில்நுட்ப துறையினர் 10% சம்பள உயர்வைப் பெறலாம்- ஆய்வில் தகவல்

2023இல் இந்தியாவில் தொழில்நுட்ப துறையினர் 10% சம்பள உயர்வைப் பெறலாம்- ஆய்வில் தகவல்

ஐடி துறை ஊழியர்களுக்கு 10% கூடுதல் சம்பளம்

ஐடி துறை ஊழியர்களுக்கு 10% கூடுதல் சம்பளம்

முந்தைய ஆண்டு கொடுக்கப்பட்ட 10.6 சதவீதத்தை விட சற்று குறைவாக இருந்தாலும் பணிநீக்கங்களுக்கு மத்தியில் 10.3% என்பது பெரிதாகவே இருக்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பிப்ரவரி 23 அன்று Aon India என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்திய ஊழியர்களுக்கு 2023ல் சராசரியாக 10.3 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்ட 1,400 நிறுவனங்களில் 46 சதவிகிதம் இந்த ஆண்டு தங்கள் தொழிலாளர்களுக்கு இரட்டை இலக்க சம்பள உயர்வை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து அதிகரித்து வரும் பணிநீங்கங்களுக்கு மத்தியில் 1,400 நிறுவனங்கள் மற்றும் 40 தொழில்களில் உள்ள 2023 சம்பள கணிப்புகளுக்கான தரவுகளை பகுப்பாய்வு செய்து இந்த சம்பள உயர்வு பற்றிய ரிப்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த துறைகள் 2023 இல் சம்பள வளர்ச்சியை அறிவிக்கும், எவையெல்லாம் நிதிகளுக்கு போராடும் என்று பிரித்து அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக பெரிதும் அடிவாங்கிக்கொண்டு இருக்கும் துறைகளான தொழிநுட்ப துறையில் உள்ள ஊழியர்கள் 2023 இல் பெரும் லாபத்தை பெறுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் மந்தநிலை மற்றும் உலகளாவிய மேக்ரோ சவால்கள் இருப்பதைத் தாண்டி இ-காமர்ஸ், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சேவைத் துறையில் உள்ள பணியாளர்கள் அதிகபட்ச சம்பள உயர்வைப் பெறுவார்கள் என்று கணக்கெடுப்பு கணித்துள்ளது.

அதே நேரத்தில், தொழில்நுட்பத் துறையானது 2022 ஆம் ஆண்டில் 21.4 சதவீத பொருளாதார வீழ்ச்சியை பதிவிட்டுள்ளது. இது இந்த தொழில் துறையின் அதிகபட்ச வீழ்ச்சி அளவு என்று வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பணியாளர்களில் கணிசமான பகுதியினர் பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் தன்னிச்சையாக பணியில் இருந்து வெளியேறுபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. ஆனால் 2023இல் இந்த நிலை மாறும் என்று ஆய்வு கணிக்கிறது.

மேலும் மருத்துவம் , சுகாதாரம், உணவகங்கள், சிமென்ட் தொழில் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் போன்ற துறைகள் இன்னும் COVID-19 பின்விளைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறது. இந்தத் தொழில்களில் சம்பள உயர்வு என்பது மிகக் குறைந்த அளவே இருக்கும் என்று Aon கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இது குறித்து இந்தியாவில் நிர்வாக இழப்பீடு மற்றும் நிர்வாக நடைமுறையின் இயக்குநரும் தலைவருமான பிரிதிஷ் காந்தி கூறுகையில், “தகுதியற்ற சம்பள உயர்வு கணிப்புகள், பதவி உயர்வுகள் மற்றும் ஆஃப்-சைக்கிள் திருத்தங்கள் மூலம் திறமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கான நிறுவனங்களின் முயற்சிகள் நடந்து வருகின்றன. திறமை மிக்க மக்களின் மீது அதிக முதலீடு செய்யும் செயல்கள்தான் நடந்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Hiked price, Salary hike, Technology