ரஷ்யா-உக்ரைன் போர்: கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு- பெட்ரோல், டீசல் விலை உயருமா?
ரஷ்யா-உக்ரைன் போர்: கச்சா எண்ணெய் விலை கிடு கிடு உயர்வு- பெட்ரோல், டீசல் விலை உயருமா?
உக்ரைனில் போர் கச்சா விலை உயர்வு
Russia - Ukraine War: உக்ரைனில் அவசரநிலை ஏற்பட்டால் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற தயாராக இருக்குமாறு உக்ரைனில் உள்ள தென் கொரிய தூதரகம் ஏற்கனவே எச்சரித்தது..
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனில் "ராணுவ நடவடிக்கையை" அறிவித்ததையடுத்து, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன் அன்று முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $100 ஐ தாண்டியது.
கிழக்கு ஐரோப்பாவில் ஒரு முழு அளவிலான மோதல் பற்றி கவலைகள் அதிகரித்ததால், அறிவிப்புக்குப் பிறகு ப்ரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் $100.04 ஆக உயர்ந்தது. WTI $95.54 ஐ எட்டியது.
ரஷ்ய அதிபர் புதின் தனது நோக்கங்களை அறிவிக்க தொலைக்காட்சியில் ஒரு அதிர்ச்சிகரமான போர் முழக்க அறிக்கையை வெளியிட்ட பிறகு கச்சா விலை உயர்வு பற்றிய தகவல்கள் வந்து சேர்ந்தன.
"நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்," என்று அவர் மாஸ்கோவில் காலை 6:00 மணிக்கு (0300 GMT) சிறிது நேரத்திற்கு முன்பு கூறினார், இந்த விவகாரத்தில் தலையிடும் எந்த நாட்டுக்கும் பதிலடி கொடுப்பதாக அவர் சபதம் செய்தார். உக்ரேனிய ராணுவம் ஆயுதங்களைக் கீழே போடுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
Insane video of a cruise missile striking Ivano-Frankivsk airport in #Ukraine.
மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் என்ற நகரத்தில், உள்ளூர் நேரப்படி காலை 7:45க்கு சற்று முன் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் சைரன்கள் கேட்டதாக சிஎன்என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மாஸ்கோ எக்ஸ்சேஞ்ச்சில் மறு அறிவிப்பு வரும் வரை அதன் அனைத்து சந்தைகளிலும் வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை அறிவிப்பதற்கு முன்னர் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், அவசரநிலை ஏற்பட்டால் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற தயாராக இருக்குமாறு உக்ரைனில் உள்ள தென் கொரிய தூதரகம் கடுமையாக வலியுறுத்தியுள்ளது.
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா வியாழனன்று, உக்ரைனில் நிலைமை "பதட்டமானது" என்றும், இந்த பிரச்சினையில் G7 நாடுகளுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் கூறினார்.
சுதந்திரமாக வெளியேற முடியாதவர்களுக்கு ரயிலில் வெளியேற்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, போர்ப்பதற்றப் பகுதிகளான கிழக்கு உக்ரைனின் லைசிசன்ஸ்க், ருபிஷ்னே, ஸ்வடொவ் ரயில் நிலையங்களுக்கு மக்களை வழிநடத்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.