Home /News /business /

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சூரியகாந்தி எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.!!

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சூரியகாந்தி எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு.!!

sunflower oil

sunflower oil

Sunflower Oil Price | உக்ரைனை ஆக்கிரமித்த பின் ரஷ்யா தன் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய எண்ணெய்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
 ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை மூலம் இன்னும் இருநாடுகளுக்கிடையே தீர்வு காணப்படாதது கவலையை அதிகரித்து உள்ளது. இந்த 2 நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள சண்டையின் தாக்கம் உலகளவில் பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுத்து உள்ளது.

உக்ரைனை ஆக்கிரமித்த பின் ரஷ்யா தன் ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் நிலையில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய எண்ணெய்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக சூரியகாந்தி எண்ணெய் (Sunflower oil) விலை வெகுவாக அதிகரித்து உள்ளது. ஏனென்றால் போர் காரணமாக உக்ரைனில் இருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே சூரியகாந்தி எண்ணெய்யின் ரீட்டெயில் (சில்லரை விற்பனை) விலை கடந்த சில நாட்களில் மிகவும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் துறையின் விலை கண்காணிப்புப் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன. சராசரியாக இந்தியாவின் மாதாந்திர சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 1.5-2 லட்சம் டன்கள் ஆகும், இது பொதுவாக நவம்பர்-ஏப்ரல் காலத்தில் குறைவாக இருக்கும்.

சென்னையில் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5 வரை சூரியகாந்தி மற்றும் பாமாயில் விலை முறையே லிட்டருக்கு ரூ.32 மற்றும் ரூ.22 அதிகரித்துள்ளது. இதேபோல் கொல்கத்தா மற்றும் டெல்லியில் சோயாபீன் எண்ணெய் விலை முறையே லிட்டருக்கு ரூ.14 மற்றும் ரூ.12 உயர்ந்துள்ளது. போர் சூழல் காரணமாக விலையை அதிகரித்திருந்தாலும் தேவைக்கு ஏற்ப சமையல் எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு இருக்காது என்று தொழில்துறை வட்டாரங்கள் கூறியிருக்கின்றன. தற்போதைய சூழல் குறித்து தகவல் தெரிவித்து உள்ள Solvent Extractors Association of India-வின் நிர்வாக இயக்குனர் பி.வி.மேத்தா, விநியோகச் சங்கிலியில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வோம் என அரசிடம் நாங்கள் உறுதியளித்துள்ளோம். நமது உள்நாட்டு நுகர்வில் சூரியகாந்தி எண்ணெயின் பங்கு வெறும் 10% மட்டுமே. ஆனால் சமையல் எண்ணெய்களின் விலைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை, ஏனெனில் நாங்கள் பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்துள்ளோம். சர்வதேச விலைகள் தான் உள்நாட்டு விலையை தீர்மானிக்கின்றன என்றார்.

Also Read : கோடைக்காலத்தில் வெப்பத்தை தணிக்க உதவும் பானங்கள்..!

உக்ரைனில் நடக்கும் போரை விட இந்தோனேசியாவின் சில புதிய நிபந்தனைகள் இந்திய சந்தையில் சமையல் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஆதாரங்கள் கூறுகின்றன. இந்தோனேசிய பாமாயில் ஏற்றுமதியாளர்கள் தங்கள் திட்டமிட்ட ஏற்றுமதியில் குறைந்தது 20% உள்நாட்டு சந்தையில் விற்க வேண்டியது இப்போது அங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாமாயில் விலை அதிகரிப்பு அனைத்து சமையல் எண்ணெய் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Russia, Russia - Ukraine

அடுத்த செய்தி