Home /News /business /

ரஷ்யா - உக்ரைன் பதற்றம்; ஒரே நாளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு

ரஷ்யா - உக்ரைன் பதற்றம்; ஒரே நாளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு

ஆபரணத் தங்கம்

ஆபரணத் தங்கம்

Gold Rate | ரஷ்யா - உக்ரைன் மோதலின் எதிரொலியாக தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு அடைந்துள்ளது.

    ரஷ்யா - உக்ரைன் மோதலைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளதால் தங்கம், பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது.

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,240 உயர்ந்து ரூ. 38,992-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,874 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோன்று உக்ரைன் - ரஷ்யா மோதலின் தாக்கம் பங்குச் சந்தையிலும் காணப்பட்டது. சுமார் 5 சதவீதம் அளவுக்கு மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை சரிவைச் சந்தித்தன.

    இதையும் படிங்க - War in Ukraine: ரஷ்ய தாக்குதலில் உக்ரைனில் 40 பேர் பலி: 2ம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பாவின் இருண்ட நேரம்

    விலை உயர்வுக்கு காரணம் என்ன?

    பங்குச் சந்தையில் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்ததால், அதில் முதலீடு செய்யும் பணத்தின் அளவு குறைந்து, அவை பாதுகாப்பான முறையில் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் தங்கத்தின் மீதான முதலீடு மிகக்குறுகிய காலத்தில் அதிகரித்துள்ளது. இதனால், தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    தங்கத்தின் மீதான விலை உயர்வு இன்னும் சில வாரங்களுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    வருங்காலத்தில் உக்ரைன் - ரஷ்யா போரின் நிலைமையைப் பொறுத்து பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் மற்றும் தங்கத்தின் விலையில் மாறுபாடு அமையும்.

    இதையும் படிங்க - உக்ரைன்-ரஷ்ய தலைவர்களிடம் பேசி போரை உடனடியாக நிறுத்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை

    ரஷ்யா - உக்ரைன் போர்

    முன்னாள் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா தாக்குதல் தொடுத்து வருகிறது. இவ்வாறு உக்ரைன் நேட்டோவுடன் இணையும்போது, அது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா கருதுகிறது.

    இதேபோன்று உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை பிரிவினைவாத குழுக்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அவர்களுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

    இதன் அடிப்படையில் உக்ரைன் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ள லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்துள்ளன. இவ்விரு பகுதிகளையும், தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருப்பதால் அப்பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள் கடும் தீவிரத்துடன் உக்ரைனை எதிர்த்து வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Gold rate, Russia - Ukraine

    அடுத்த செய்தி