ரஷ்யா - உக்ரைன் விவகாரம் காரணமாக இன்று பங்கு சந்தை சரிவுடனேயே தொடங்கியது. கடந்த பிப்ரவரி 16ம் தேதியில் இருந்து தற்போதுவரை 9.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட நாட்களாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. தற்போது மீண்டும் உக்ரைன் மீது போர் தொடுத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா முயன்று வருவதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
உக்ரைன் - ரஷ்யா விவகாரம் பங்கு சந்தையிலும் தீவிரமாக எதிரொலித்து வருகிறது. கடந்த 15ம் தேதி மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகள் 3 சதவீதம் அளவில் சரிவைக்கண்டன. சென்செக்ஸ் குறியீட்டெண் 1,747 புள்ளிகள் சரிந்து 56,405-ஆக குறைந்தது. நிஃப்டி குறியீட்டெண் 532 புள்ளிகள் சரிந்து 16,842 ஆக குறைந்தது. பின்னர் பங்கு சந்தை ஓரளவு ஏற்றத்தை கண்டது. இதன் தாக்கம் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் நேரடியாக தற்போது எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில், கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனுக்கு சொந்தமான டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய கிழக்கு மாகாணங்களை சுதந்தர நாடாக ரஷ்யா அறிவித்துள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக தனது ராணுவத்தையும் அனுப்பி வைத்துள்ளது. இதனால் போருக்கான சூழல் மீண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பங்கு சந்தையிலும் எதிரொலித்தது.
இதையும் படிங்க: உக்ரைன் பிரிவினைவாத பகுதிகளின் சுதந்திரத்தை அங்கீகரித்தார் ரஷ்ய அதிபர் புதின்
இன்று பங்கு சந்தை தொடங்கியபோது சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவை கண்டது. இதேபோல், நிஃப்டி குறியீட்டெண் 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. மதியம் ஒரு மணியளவில் நிஃப்டி
16968 ஆகவும் சென்செக்ஸ்
56,859 ஆகவும் உள்ளது
. உச்சகட்ட பதட்டங்கள் மற்றும் உடனடி போர் பற்றிய செய்திகளால் தூண்டப்பட்ட அச்ச சுனாமி, BSE-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனத்தை ஐந்து நாட்களுக்குள் 9.1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரித்துள்ளது.
மேலும் படிங்க: 45 வயதில் Home Loan பெற முயற்சி செய்கிறீர்களா? இதைச் செய்தால் சக்சஸ் ஆகும்
கடைசியாக பிப்ரவரி 16ம் தேதி இந்திய சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தது. அதன் பிறகு தொடர்ந்து வீழ்ச்சியில் உள்ளது. ஊடங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.