Home /News /business /

ரஷ்யா- உக்ரைன் போர் ஏற்பட்டால் இந்தியாவில் எவையெல்லாம் விலை உயரும்?

ரஷ்யா- உக்ரைன் போர் ஏற்பட்டால் இந்தியாவில் எவையெல்லாம் விலை உயரும்?

ரஷ்யா- உக்ரைன்

ரஷ்யா- உக்ரைன்

Russia- ukraine crisis: ரஷ்யா- உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழல், இரு நாடுகளும் யுத்தத்தில் ஈடுபட்டால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு என்ன எவற்றின் விலையெல்லாம் உயரும் என்பது பலரின் சந்தேகமாக உள்ளது. 

    ரஷ்யா- உக்ரைன் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. 2014-ம் ஆண்டின்போது, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றிய போது இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்தது. தற்போது, ரஷ்யா - உக்ரைன் விவகாரம் நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கிழக்கு உக்ரைனில் உள்ள இரண்டு பகுதிகள் டோன்ஸ்டெக் மற்றும் லஹன்ஸ்சக். இவை இரண்டையும் டோன்ஸ்டெக் மக்கள் குடியரசு மற்றும் லஹன்ஸ்சக் மக்கள் குடியரசு என்ற இரு கிளர்ச்சிக் குழுக்கள் ஆட்சி செய்து வருகின்றன. உக்ரைன் அரசு, இந்த இரு குழுக்களையும் பயங்கரவாத அமைப்பாக பாவித்து வருகிறது. இந்நிலையில் இந்த இரு பகுதிகளையும் சுதந்திரம் பெற்ற பகுதிகளாக ரஷ்ய அதிபர் புதின் அங்கீகரித்துள்ளார்.

    மேலும், அமைதி நடவடிக்கை என கூறி இந்த இரண்டு நகரங்களுக்கும் ராணுவ வீரர்கள், பீரங்கி போன்றவற்றையும் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால்  சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படும். இந்தியாவிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தற்போதே பங்கு சந்தைகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

    இயற்கை எரிவாயு

    ரஷ்யா- உக்ரைன் பதற்றம் காரணமாக பெட்ரோலிய பொருட்களின் விலை கிடுகிடுவென சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது.  ஒரு பேரல்  Brent கச்சா எண்ணெய் விலை 96.7 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. 2014ம் ஆண்டு செப்டம்பருக்கு பின்னர் இது மிகப் பெரிய உயர்வாகும்.

    இதையும் படிங்க: பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புதினின் நடவடிக்கை.. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம்


    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது. தற்போதைய பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் மேல் செல்லக்கூடும். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அதனால் சர்வதேச ஜிடிபி பாதிக்கப்படும்.

    கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 150 டாலராக நிர்ணயிக்கப்பட்டால் சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 0.9 சதவீதம் வரை சரியும் என்று ஜெபி மோர்கன் கணித்துள்ளது.

    எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணெய் மானியம் அதிகரிக்கப்படும்
    கச்சா எண்ணெய் விலை உயர்வால் எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் மீதான மானியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெட்ரோல், டீசல் விலை உயரும்
    கடந்த காலங்களில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இருந்தது. 2021 ஆம் ஆண்டில் எரிபொருள் விலையில் நாடு வரலாறு காணாத உயர்வைக் கண்டது.

    மேலும் படிக்க: குருகிராம் சொசைட்டியில் பாதுகாப்பற்ற 700 குடியிருப்புகளை இடிக்க முடிவு


    தற்போது நாட்டில் 100 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை. 5 மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் இவற்றின் விலையில் உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவும் பிரச்சனை நீடித்தால், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

    இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 25 சதவீதத்தை எண்ணெய் கொண்டுள்ளது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது. எண்ணெய் விலை உயர்வு நடப்பு கணக்கு பற்றாக்குறையை பாதிக்கும்.

    கோதுமை விலை உயரலாம்
    கருங்கடல் பகுதியில் (Black sea) இருந்து தானியங்கள் வருவதில் தடங்கல் ஏற்பட்டால், அது விலைவாசி மற்றும் எரிபொருள் உணவுப் பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

    ரஷ்யா உலகின் முதன்மையான கோதுமை ஏற்றுமதியாளராக உள்ளது, உக்ரைன் கோதுமை ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ளது. கோதுமையின் மொத்த உலகளாவிய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட கால் பங்கை இரு நாடுகளும் கொண்டுள்ளன.

    சமீபத்திய ஐக்கிய நாடுகளின் அறிக்கையில், விநியோகச் சங்கிலிகளில் தொற்றுநோய்களின் தாக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால்,  ஏற்கனவே, உணவுப் பொருட்களின் விலை இதுவரை இல்லாத அளவு மிகவும் உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    உலோகங்களின் விலை உயரும்
    ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, வாகன தயாரிப்பு மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பல்லேடியம் (palladium,)என்ற உலோகத்தின் விலை சமீபத்திய வாரங்களில் உயர்ந்துள்ளது. பல்லேடியத்தின் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Economy, India, Russia

    அடுத்த செய்தி