முகப்பு /செய்தி /வணிகம் / டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 69.86 ஆகக் குறைந்தது!

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 69.86 ஆகக் குறைந்தது!

கோப்புப் படம்

கோப்புப் படம்

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.32 சதவீதம் குறைந்து 54.35 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 4.99 சதவீதம் சரிந்து 45.88 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வியாழக்கிழமை 69.70 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை 16 பைசா சரிந்து 69.86 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வியாழக்கிழமை சரிந்து இருந்ததால் டாலர்க்கு எதிரான ரூபாய் மதிப்பும் உயர்ந்து இருந்தது. எனவே புதன்கிழமை டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70.40 ரூபாயாக இருந்ததில் இருந்து நேற்று 70 பைசா குறைந்தது.

இதனால் இன்று இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் 20 பைசா வரை குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பு உயர்வு ஐடி நிறுவனப் பங்குகளுக்கு நன்மை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.32 சதவீதம் குறைந்து 54.35 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 4.99 சதவீதம் சரிந்து 45.88 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

பங்கு சந்தை காலை 10:52 மணியளவில் மிக மோசமாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மும்பை பங்கு சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 328.10 புள்ளிகள் சரிந்து 36,109.73 புள்ளியாகவும், தேசிய பங்கு சந்தைக் குறியீட்டு எண்ணான நிப்டி 104.60 புள்ளிகள் சரிந்து 10.847.10 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பார்க்க: ஸ்டெர்லைட் ஆலை 2 மாதங்களில் திறக்கப்படும்: ஸ்டெர்லைட் சிஇஓ தகவல்

First published:

Tags: Indian Rupee