முகப்பு /செய்தி /வணிகம் / கச்சா எண்ணெய் விலை உயர்வால் ரூபாய் மதிப்பு 26 பைசா சரிவு!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் ரூபாய் மதிப்பு 26 பைசா சரிவு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

அந்நியச் செலாவணி பரிமாற்றத்துக்கான ரூபாய் மதிப்பும் 26 பைசா சரிந்து டாலருக்கு எதிராக 71.45 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து இறக்குமதி செய்ய அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்தால் ரூபாய் மதிப்பு 26 பைசா சரிந்து 71.45 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இன்று காலை நாணயச் சந்தை தொடங்கிய உடன் வங்கிகள் இடையிலான அந்நியச் செலாவணி பரிமாற்றத்துக்கான ரூபாய் மதிப்பும் 26 பைசா சரிந்து டாலருக்கு எதிராக 71.45 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய ரூபாய் மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளின் நாணயங்களுக்கு எதிராகவும் அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. ஆனால் பங்குச்சந்தை லாபத்துடன் தொடங்கியுள்ளது வர்த்தகர்களுக்கு ஆதரவாக உள்ளது.

பிராண்ட் கச்சா எண்ணெய் பேரல் 62.70 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் பேரல் 53.80 டாலர் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலை 11:20 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 222.93 புள்ளிகள் உயர்ந்து 36,598.56 புள்ளியாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 51.15 புள்ளிகள் உயர்ந்து 10,958.10 புள்ளியாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலையில் இன்று காலை மாற்றம் ஏதுமில்லை. 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராம் 3,091 ரூபாய் எனவும், சவரன் 24,728 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் 24 காரட் சுத்த தங்கம் கிராம் 3,238 ரூபாய் எனவும், சவரன் 25,904 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 10 பைசா உயர்ந்து 42.20 ரூபாய் எனவும், கிலோ 42,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Also See..

First published:

Tags: Indian Rupee, US dollar