முகப்பு /செய்தி /வணிகம் / டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு!

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு!

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

திங்கட்கிழமை சந்தை நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 9 பைசா சரிந்து 71.28 ரூபாயாக வர்த்தகமானது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 5 பைசா உயர்ந்து 71.23 ரூபாயாக வியாழக்கிழமை வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு பல்வேறு நாணயங்களுக்கு எதிராகச் சரிந்துள்ள சர்வதேச சந்தையின் மந்த நிலைக்குக் காரணமாகவும் அமைந்துள்ளது.

இந்திய சந்தை இன்று காலை முதல் சரிவுடன் இருந்தாலும் ரூபாய் மதிப்பு மட்டும் சற்று ஆறுதலாக உயர்ந்துள்ளது.

திங்கட்கிழமை சந்தை நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 9 பைசா சரிந்து 71.28 ரூபாயாக வர்த்தகமானது.

காலை 11:40 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 201.09 புள்ளிகள் சரிந்து 36,377.87 புள்ளியாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 67.10 புள்ளிகள் சரிந்து 10,895.75 புள்ளியாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 2.42 சதவீதம் உயர்ந்து 62.70 டாலர் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் WTI கச்சா எண்ணெய் விலை 3.22 சதவீதம் உயர்ந்து 53.80 டாலராக விற்று வருகிறது.

மேலும் படிக்க: சென்னை புத்தக கண்காட்சி வசூல் சாதனை

First published:

Tags: Indian Rupee