அமெரிக்காவில் நிலவி வரும் பணவீக்கம், மற்றும் பொருளாதார மந்தநிலையின் வாய்ப்பு ஆகியவை இந்திய தேசிய ரூபாயின் (INR) மதிப்பில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் பதட்டத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் CPI பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் 9.1% ஆக இருந்தது, இது 8.8% என்ற ஒருமித்த மதிப்பீட்டை(consensus estimate) விட அதிகமாகும். ஃபெடரல் ரிசர்வ் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட பெரிய நகர்வைத் தொடர்ந்து இந்த மாத இறுதியில் ஒரு முழு புள்ளியால் உயர்த்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் இப்போது பந்தயம் கட்டுகின்றனர்.
உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தில் ஏற்படும் இந்த மந்தநிலை, மற்ற நாடுகளில் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் என ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் மோசமான வெளி நிலுவைகள்(deteriorating external balances) எரிபொருள் வெளியேற்றம் ஆகிய அச்சங்களுக்கு மத்தியில் இந்த ஆண்டு ரூபாயின் மதிப்பு ஏற்கனவே 6.5% க்கு மேல் சரிந்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.
ரூபாய் உயர்வின் மதிப்பு நுகர்வோரை எவ்வாறு பாதிக்கிறது?
இந்தியா, இறக்குமதியைச் சார்ந்து இருக்கும் நாடாக இருப்பதால், பணவீக்கச் சூழலில் ரூபாய் வீழ்ச்சியின் தாக்கத்தின் தீவிரத்தை உணர முடியும், ஏனெனில் அது குடும்பங்களின் செலவின முடிவுகளை மேலும் பாதிக்கும்.
இறக்குமதிக்கான பரிவர்த்தனைகள் டாலர் அடிப்படையில் செய்யப்படுவதால், பலவீனமான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி பொருட்களின் விலையை உயர்த்தும். ஒட்டுமொத்தமாக, பலவீனமான ரூபாய் மதிப்பு, குறுகிய காலத்தில் பணவீக்கத்தை அதிகப்படுத்தும். எலக்ட்ரானிக்ஸ் அல்லது பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களாக இருந்தாலும் (எண்ணெய் சேர்க்கப்பட்டவை), நுகர்வோர் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகம் செலவழிக்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புபவர்கள் டாலரின் மதிப்பு வலுவடைந்து, ரூபாய் வலுவிழந்து வருவதால் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். வெளிநாட்டில் படிப்பது விலை உயர்ந்ததாக அமைகிறது, அதே போல் இந்த மாற்றத்திற்குப் பிறகு கட்டணத் தொகையும் அதிகரிக்கும்.
ரூபாயின் மதிப்பை கீழே தள்ளுவது எது?
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக சரிந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 1 நிலவரப்படி $5.01 பில்லியன் குறைந்து $588.3 பில்லியனாக உள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு இப்போது பதினான்கு மாதங்களில் மிகக் குறைந்த அளவில் உள்ளது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து வலுவிழந்து வருவதால், அதை உயர்த்துவதற்காக மத்திய ரிசர்வ் வங்கி டாலரை விற்பனை செய்து வருகிறது.
Also Read : பிரதமர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6000 பெற பதிவு செய்து பலன் பெறுவது எப்படி?
இந்தியாவின் அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை மற்றும் மூலதன வெளியேற்றம் ஆகியவை ரூபாயின் புதிய அபாயங்களை உயர்த்துகின்றன.இந்தியாவின் வெளி நிலுவைகள் மோசமடைந்து வருவதையே தரவுகள் காட்டுகிறது. "முன்னோக்கிச் செல்லும்போது, மோசமான வெளிப்புற நிலுவைகள் காரணமாக ரூபாயின் போக்கு டாலருக்கு எதிராக பலவீனமாகத் தள்ளப்படும்" என்று கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம் இந்த மாத தொடக்கத்தில் ஒரு குறிப்பில் எழுதியது.
ஏற்றுமதி மந்தமாக இருந்ததாலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததாலும், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை மே மாதத்தில் 24 பில்லியன் டாலராக உயர்ந்தது. கடந்த ஒரு வருடத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் இருந்து $32 பில்லியனுக்கும் அதிகமான தொகையை வெளியேற்றியுள்ளனர், இது தைவானுக்கு அடுத்தபடியாக ஆசியாவின் மிக மோசமான செயல்பாடாக(worst performer) உள்ளது.
ரூபாய் வீழ்ச்சியை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிறுவனங்களுக்கு அதிக வெளிநாட்டு கடன் வரம்புகள் மற்றும் அரசு பத்திரங்களில் எளிதாக வெளிநாட்டு உரிமை விதிகள் உட்பட அதன் இருப்புக்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை முன்னரே அறிவித்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், "ஒரு மத்திய வங்கியாக, அதிகப்படியான ஏற்ற இறக்கத்தை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் சக தோழர்கள் நிமிடத்திற்கு நிமிடம்(minute-to-minute basis) என்ற அடிப்படையில் உத்தியை முடிவு செய்கிறார்கள்.” என்றார்.
மேலும், வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை அடையும் வகையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில், தொடர்ந்து தேவையான கொள்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துஉள்ளார்.
மேலும், ”குறுகிய கால அளவில், நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணிகள் பணவீக்கத்தை மேலும் பாதிக்கலாம். என்றாலும், நடுத்தர கால அளவில், பணவீக்கத்தின் போக்கு, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையால் தீர்மானிக்கப்படும்.எனவே, பணவியல் முடிவுகள் உரிய நேரத்தில் எடுக்கப்பட்டு, பொருளாதாரத்தை வலுவான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இடத்தில் வைக்க வேண்டும்.இதை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி அதன் கொள்கை களை வகுத்துக் கொள்ளும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய ரூபாயின் மதிப்பு என்பது காட்டில் உலவும் தனி ஓநாய் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்களில், இந்தோனேசியாவின் ருபியா, சீனாவின் யுவான், தென்னாப்பிரிக்காவின் ராண்ட் மற்றும் மலேசிய ரிங்கிட் அனைத்தும் 2022ம் நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு எதிராக 5-6% பலவீனமடைந்துள்ளது நினைவு கூறத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.