• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இன்று முதல் இனி 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ். சேவை

இன்று முதல் இனி 24 மணி நேரமும் ஆர்.டி.ஜி.எஸ். சேவை

மாதிரிப் படம்.

மாதிரிப் படம்.

வங்கிகளில் பெரும் தொகை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் சேவை இனி 24 மணிநேரமும் செயல்படும்.

  • Share this:
    2 லட்ச ரூபாய்க்கு மேல் ஒரு வங்கியின் கிளையில் இருந்து மற்றொரு வங்கிக் கிளையில் உள்ள கணக்கிற்கு அனுப்ப பயன்படும் வங்கி சேவை தான் Real Time Gross Settlement System என அழைக்கப்படும் ஆர்டிஜிஎஸ். இந்த சேவையானது தினமும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வங்கியின் வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த சேவை வழங்கப்பட்டு வந்தது. NEFT சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையில் பணம் அனுப்ப முடியும்.  ஆனால் அதற்கு மேல் அனுப்ப வேண்டும் எனில் ஆர்டிஜிஎஸ் சேவையினை பயன்படுத்தி தான் அனுப்ப முடியும்.

    இந்த ஆர்டிஜிஎஸ் சேவை மூலம் ஒரே வங்கியின் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு எவ்வித கட்டணமுமின்றி பணம் அனுப்பிக்கொள்ளலாம். அதேநேரத்தில் ஒரு வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்கிற்கு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப 24 ரூபாய் 50 பைசா கட்டணமாகவும், 5 லட்சத்திற்கு மேல் பணம் அனுப்பினால் 49 ரூபாய் 50 காசுகளும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...Gold Rate | தங்கம் விலை சரிந்தது... இன்றைய நிலவரம் என்ன?

    இந்தக் கட்டணங்களுக்கு மிகாமல் வசூலிக்கவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 16 முதல் நெஃப்ட் சேவையினை 24 மணி நேர சேவையாக மாற்றிய ரிசர்வ் வங்கி தற்போது ஆர்டிஜிஎஸ் சேவையினை 24 மணி நேரமாக அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: