ஹோம் /நியூஸ் /வணிகம் /

தீபாவளிக்கு இத்தனை ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையா? பாத்தா ஷாக் ஆயிடுவீங்க!

தீபாவளிக்கு இத்தனை ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனையா? பாத்தா ஷாக் ஆயிடுவீங்க!

மாதிரி படம்

மாதிரி படம்

Gold sale | இந்தியாவில் தங்கத்தின் தேவை சுமார் 80 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக தகவல்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தியாவில் இரண்டே நாட்களில் ரூ. 25 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

  இந்தியாவில் தீபாவளி பண்டிகையின் போது தங்க நகை வியாபாரம் களைகட்டியுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாட்களான அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விற்பனை 25 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  மொத்த வர்த்தகம் ரூ.45,000 கோடி என்றும் அதில் தங்கம் மட்டும் ரூ.25,000 கோடி என்றும் மற்ற பொருட்களின் விற்பனை ரூ.20,000 கோடி என்றும் கூறப்படுகிறது.

  கடந்த இரண்டு நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே 25 ஆயிரம் கோடி விற்பனையானது ஒரு மிகப்பெரிய சாதனை என அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க | மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு உடனே ஓகே ஆகும் பர்சனல் லோன்! என்ன காரணம் தெரியுமா?

  இந்தியாவில் தங்கத்தின் தேவை சுமார் 80 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் தங்கத்தின் வர்த்தகம் முழுமையாக மீண்டு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Gold, Gold Price