காஃபி டே நிறுவனக் கணக்கிலிருந்து மாயமான ₹ 2 ஆயிரம் கோடி... தணிக்கைக் குழு ஆய்வு!

காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா

தொழில் நஷ்டம், கடன், முதலீட்டாளர்களின் தொல்லை எனப் பல விஷயங்கள் காஃபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  இந்தியாவின் மிகப்பெரிய காஃபி டே நிறுவனத்தின் நிறுவனர் கடந்த ஜூலை மாதம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

  தொழில் நஷ்டம், கடன், முதலீட்டாளர்களின் தொல்லை எனப் பல விஷயங்கள் காஃபி டே நிறுவனர் சித்தார்த்தாவின் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது காஃபி டே நிறுவனம் மீதான நிதி தொடர்பான செய்தி மீண்டும் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளது.

  சித்தார்த்தா மறைவுக்குப் பின்னர் காஃபி டே குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பு 'காஃபி டே எண்டர்பிரைசஸ்' குழும போர்டு கவுன்சிலிடம் இருந்தது. சமீபத்தில் குழுமத்தின் இயக்க நிர்வாகக் குழு மேற்கொண்ட ஆய்வில் காஃபி டே நிறுவனக் கணக்குகளிலிருந்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மாயமாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

  தணிக்கைக் குழு இதுவரையில் அதிகாரப்பூர்வ ஆய்வை சமர்ப்பிக்கவில்லை என்றாலும் கணக்கிலிருந்து நிச்சயமாக 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை மாயமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. மறைந்த நிறுவனர் சித்தார்த்தாவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகப்படியான கடன் இருப்பதால் கணக்கு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

  மேலும் பார்க்க: 
  Published by:Rahini M
  First published: