கொரோனா காலத்தில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சுமார் ரூ.19,000 கோடி மோசடி - ரிசர்வ் வங்கி

கொரோனா காலத்தில், பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சுமார் 19,000 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் சுமார் ரூ.19,000 கோடி மோசடி - ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
  • News18
  • Last Updated: September 21, 2020, 5:52 PM IST
  • Share this:
கொரோனா காலத்தில் பொதுத்துறை வங்கிகளில், பல்வேறு நிதி முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும், நடைபெற்ற மோசடியில், அதிக எண்ணிக்கையிலான நிதி முறைகேடு பாரத ஸ்டேட் வங்கியில் தான் நடைபெற்று இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்தில், பொதுத்துறை வங்கிகளில் 2,867 நிதி மோசடிகள் நடைபெற்று இருப்பதாகவும், இதில் 19,964 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சந்திரசேகா் கெளா் என்பவா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, பதில் அளித்துள்ள ரிசா்வ் வங்கி, மொத்தம் உள்ள 12 பொதுத் துறை வங்கிகளில் பாங்க் ஆப் இந்தியாவில் 47 மோசடிகளில், 5,125 கோடி ரூபாய் அளவிற்கு நிதி முறைகேடு நடைபெற்றதாகவும், கனரா வங்கியில் 33 மோசடிகளில் 3,885 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாங்க் ஆப் பரோடாவில் 60 மோசடிகளில் 2,843 கோடி ரூபாயும், பாரத ஸ்டேட் வங்கியில் 2,326 கோடியும், இந்தியன் வங்கியில் 1,470 கோடியும், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ஆயிரத்து 208 கோடியும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி என மொத்தமாக 19,964 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Also read... Gold Rate | வாரத்தின் முதல் நாள் சரிவுடன் தொடங்கியது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?இது இறுதி செய்யப்பட்ட தொகையில்லை என்றும், இறுதி தொகை குறித்த அறிக்கையை வங்கிகள் வழங்கும் போது, இந்த எண்ணிக்கை மாறுபடலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த முறைகேடுகள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு ஏற்பட்ட இழப்பாக கருதப்படாது என்றும் வாடிக்கையாளா்கள் பெற்ற கடனைத் திருப்பி செலுத்தாதது, நிலுவையில் உள்ள கடன் ஆகியவையும் இதில் கணக்கில் கொள்ளப்படும் என்று ரிசா்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading