Home /News /business /

Aadhaar - PAN இணைக்க இரட்டிப்பு அபராதம்.. கட்டணம் செலுத்தும் முறை இது தான்!

Aadhaar - PAN இணைக்க இரட்டிப்பு அபராதம்.. கட்டணம் செலுத்தும் முறை இது தான்!

Aadhaar and Pan

Aadhaar and Pan

PAN-Aadhaar Linking Penalty | ஆதார்- பான்கார்டு இணைக்காவிடில் ஜூலை 1 முதல் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி NSDL போர்ட்டலில் சலான் எண். ஐடிஎன்எஸ் 280-ன் கீழ் செலுத்தலாம்..

    இந்திய மக்கள் அனைவரும் தங்களது ஆதார் கார்டுடன் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வந்தது. முன்னதாக மார்ச் 31, 2022 ஆம் ஆண்டு இணைக்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (NSDL) கடந்த 2022, மார்ச் இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின் படி, மக்களின் வசதிக்காக ஆதார்- பான் கார்டு இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31,2022 முதல் மார்ச் 31, 2023 வரை நீடித்து உத்தரவிட்டது. இருந்தப்போதும் ஏப்ரல் 1, 2022 முதல் ஆதார்- பானை இணைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்திருந்தது.

    அதாவது 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஆதார் கார்டை இணைப்பவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல் அபராதக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது.

    ஆதார் - பான் இணைக்காவிடில் ஏற்படும் பிரச்சனைகள்:

    தற்போது அரசு விதித்துள்ள ரூபாய் ஆயிரம் அபராதக்கட்டணத்தை  கட்டி நீங்கள் ஆதார்- பான் கார்டை வருகின்ற மார்ச் 31, 2023 ஆம் தேதிக்குள் இணைக்காவிடில் பான் கார்டு செயலிழக்க நேரிடலாம் மற்றும் வருமான வரிச்சட்டம் 1961 ன் கீழ் அனைத்து விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என அரசு எச்சரித்துள்ளது.

    மேலும் உங்களது பான் எண் செயலிழந்துவிட்டால், மார்ச் 2023க்கு பிறகு நீங்கள் எவ்வித நிதி பரிவர்த்தனைகளையும் உங்களால் மேற்கொள்ள முடியாது. மேலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல், வங்கிக்கணக்கைத் தொடங்குதல் மற்றும் முதலீடுகள் மேற்கொள்வது, வருமான வரி ரிட்டன்களை பெற முடியாதது போன்ற பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேரிடும். எனவே இதுவரை ஆதார் கார்டு- பான் கார்டை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்க மறந்துவிடாதீர்கள்..

    தற்போது ஆதார்- பான் இணைப்பிற்கு அரசு விதித்துள்ள அபாரத் தொகையை எப்படி செலுத்த வேண்டும் என இங்கே தெரிந்துக்கொள்வோம்.



    ஆதார்- பான் கார்டு இணைப்பிற்கான அபராதக்கட்டணம் செலுத்தும் முறை:

    முதலில், https://onlineservices.tin.egov-nsdl.com/etaxnew/tdsnontds.jsp என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேணடும்.

    ஆதார் கார்டு பான் இணைப்புக் கோரிக்கையை சமர்ப்பிக்க சலான் எண் ITNS280 ன் கீழ் தொடர்வதும் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

    Also Read : போஸ்ட் ஆபீஸில் இருக்கும் இந்த 3 திட்டத்தில் இவ்வளவு லாபமா! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

    இதனையடுத்து பொருந்தக்கூடிய வரியைத் (tax applicable) தேர்ந்தெடுக்கவும்.

    பின்னர் மைனர் ஹெட் 500 மற்றும் மேஜர் ஹெட் 0021 ஆகியவற்றின் கீழ் ஒரே சலானில் கட்டணம் செலுத்துவதை உறுதி செய்யவும்.

    எதன் மூலம் பணம் செலுத்துகிறீர்கள்? அதாவது நெட் பேங்கிங் அல்லது டெபிட் கார்டு மூலமாகவா என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    Also Read : முதலீடு செய்தால் சிறந்த ஆதாயங்கள் தரும் 7 LIC பிளான்கள் இங்கே..!

    இதனையடுத்து பான் எண்ணை உள்ளிட்டு மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுத்து முகவரியைப் பதிவு செய்துவிட்டு, இறுதியில் சரியாக கேப்சாவை உள்ளிட்டு தொடரு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.இப்போது உங்களது அபாரதத் தொகையை நீங்கள் எளிய முறையில் ஆன்லைன் வாயிலாக செலுத்திக்கொள்ளலாம்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Aadhaar card, Pan card

    அடுத்த செய்தி