• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நாட்டுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாயை சேமித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

நாட்டுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாயை சேமித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

  • Share this:
    தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியதன் மூலம், நாட்டுக்காக ஒரு லட்சம் கோடி ரூபாயை சேமித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற 44-வது பொது கணக்கு தின நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர், நேரடி மானியத் திட்டம், ஜிஎஸ்டி ஆகியவற்றை அமைதிப்புரட்சியாக உலக நாடுகள் பார்ப்பதாக தெரிவித்தார்.

    எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி ஒரு லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழலுக்கும், தவறு செய்பவர்களுக்கும் இடமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: