Home /News /business /

இவர்கள் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் - பட்டியலில் முதலில் இருப்பது யார் தெரியுமா?

இவர்கள் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் - பட்டியலில் முதலில் இருப்பது யார் தெரியுமா?

இவர்கள் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணிகள்

இவர்கள் தான் இந்தியாவின் பணக்கார பெண்மணிகள்

அப்பல்லோ மருத்துவமனைகளின் குழுமத்திலிருந்து நான்கு பங்கேற்பாளர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன

    ஆண்களுக்கு நிகராகவும், பல துறைகளில் ஆண்களுக்கு ஒரு படி மேலாகவும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். தலைமை பொறுப்பு என்று வரும் பொழுது ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் சதவிகிதம் மிகவும் குறைவானதாக இருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பல நாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.

    பொதுவாக உலக அளவில் அல்லது ஒரு நாட்டளவில் டாப் 5, டாப் 10 பணக்காரர்களின் பட்டியல்கள் வெளியிடப்படும். அதில் பெரும்பாலும் ஆண்களின் பெயரே இருக்கும். பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள் என்பதற்கு அடையாளமாக இந்தியாவின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றது பெண்மணிகளைப் யார் என்று இங்கே பார்க்கலாம்.

    இந்தியாவின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது ரோஷினி நாடார் மல்ஹோத்ரா. இவர் ஹெச்.சி.எல் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. கோடாக் பிரைவேட் பேங்கிங்-ஹுருன் பட்டியலிட்ட 2021 ஆம் ஆண்டின் தரவுப்படி இவருடைய சொத்து மதிப்பு இந்திய ரூபாய் கணக்கில் 84,330 கோடி என்று கூறப்படுகிறது. ரோஷினி நாடார் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்தியாவின் பணக்கார பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் மிக குறுகிய காலத்திலேயே இவருடைய நிகர சொத்து மதிப்பு 54% அதிகரித்துள்ளது.

    Also Read : ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற இதை செய்தாலே போதும்!

    இவருக்கு அடுத்த இடத்தில், நைகா என்ற புகழ்பெற்ற ஈ-காமர்ஸ் அழகு சாதன பொருட்களின் தளத்தின் நிறுவனரான ஃபால்குனி நாயர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நைகா என்ற பிராண்டிப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. செல்ஃப் மோடு விமன் என்று கூறும் அளவுக்கு தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு, அழகு சாதன துறையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள ஃபால்குனி நாயரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாயின் படி, 57,520 கோடி ஆகும். நைகா நிறுவனம் 10 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்பது இதில் முக்கியமான விஷயம். சாதிப்பதற்கு வயதும் ஒரு தடையில்லை என்பதை இவரின் வெற்றி பறைசாற்றுகிறது.

    பயோகான் நிறுவனரான கிரன் மசும்தார் ஷாவின் சொத்து மதிப்பு 21% சரிந்ததால் இவர் இந்தியாவின் பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவருடைய சொத்து மதிப்பு 29,000 கோடி ஆகும்.

    அப்பல்லோ மருத்துவமனைகளின் குழுமத்திலிருந்து நான்கு பங்கேற்பாளர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே நிறுவனத்தில் இருந்து மிகப்பெரிய பங்களிப்பு அப்போலோ குழுமத்தில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. போபாலைச் சேர்ந்த ‘ஜெட் செட் கோ’ என்ற நிறுவனத்தின் தலைவரான 33 வயதான கனிகா டெக்ரீவால் பட்டியலில் இணைந்தவர்களில், மிகவும் இளையவரவார். இவரின் சொத்து மதிப்பு 420 கோடி.

    இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் பட்டியல் தயாரிப்பதற்கு பல துறைகளில் இருந்தும் ஜிம் பரிசீலனை செய்யப்பட்டன.

    அதில், டாப் 10 பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் இந்த ஆண்டு இரண்டு புதிய பெண்மணிகள் இணைந்துள்ளார் என்பது பெருமைக்குரியது. அது மட்டுமல்லாமல் இந்த இந்த பட்டியலில் பறேசலனை செய்யப்பட்ட பெண்கள், நாட்டின் தலைநகரமான டெல்லியில் இருந்து அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இருந்து 25 பெண்கள், மும்பையில் 21 மற்றும் ஹைதராபாத்தில் 12 பெண்கள் இந்த பட்டியலில் பரிசீலனை செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் ஃபார்மா துறையில் இருந்து 12 பங்கேற்பாளர்களும், ஹெல்த்கேர் துறையில் இருந்து 11 பங்கேற்பாளர்களும், நுகர்வோர் பொருட்களில் இருந்து 9 பெண்களும் இந்தியாவின் முதல் 100 பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் இணைந்துள்ளனர்.

    இந்தியப் பெண்மணிகள் என்று இந்த பட்டியல் கூறுவது, இந்தியாவில் பிறந்த அல்லது இந்தியாவில் வளர்ந்த மற்றும் தங்கள் வணிகத்தை ஆக்டிவ் ஆக மேற்கொள்ளும் பெண்களை குறிக்கிறது. ஒட்டுமொத்தமாக டாப் 100 பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்திய பெண்களின் சொத்து மதிப்பு 53% அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு 2% பங்களித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Business

    அடுத்த செய்தி