பணி ஓய்வு பெற்ற இண்டஸ்இண்ட் வங்கி சிஇஓ... வீழ்ந்த பங்குகள்..!

இன்றைய வர்த்தக நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

பணி ஓய்வு பெற்ற இண்டஸ்இண்ட் வங்கி சிஇஓ... வீழ்ந்த பங்குகள்..!
இண்டஸ்இண்ட் வங்கி
  • Share this:
இண்டஸ்இண்ட் வங்கியின் சிஇஓ ரோமேஷ் சோப்தி பணி ஓய்வு அறிவிப்பு வெளியானதிலிருந்து இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் வர்த்தகத்தில் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

இண்டஸ்இண்ட் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓ ஆகப் பதவி வகித்து வந்த ரோமேஷ் சோபித் தனது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். கடந்த 12 ஆண்டுகளாக இப்பதவியில் இருந்த சோபித், தற்போது தனது பொறுப்பை சுமந்த் கத்பாலியாவிடம் வழங்கியுள்ளார்.

சோபித் பணி ஓய்வு அறிவிப்பு வெளியானதிலிருந்து பங்கு வர்த்தகத்தில் இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன. தற்போது புதிய சிஇஓ சுமந்த்-க்கான பொறுப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது என நிதிசார் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.


சுமந்த் ஒரு சாட்டர்ட் அக்கவுண்டண்ட் ஆகப் பணியைத் தொடங்கியவர். அம்ரோ வங்கி, சிட்டிபேங்க், பேங்க் ஆஃப் அமெரிக்கா ஆகிய நிறுவனங்களின் கீழ் பணிபுரிந்துள்ளார். நுகர்வோர் வணிகத்தில் தேர்ச்சி பெற்றவராக அறியப்படும் சுமந்த் 2008-ம் ஆண்டு இண்டஸ்இண்ட் வங்கியில் சேர்ந்து தற்போது அந்த வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இன்றைய வர்த்தக நேரத்தில் இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்தியப் பங்குச்சந்தைகளின் நிலவரமும் தற்போது ஏதுவானதாக இல்லையென்பதால் புதிய தலைவர் சுமந்த்-க்கான சவால்கள் அதிகம் உள்ளன.

மேலும் பார்க்க: சேவையை நிறுத்திக்கொண்ட அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள்!


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்