முகப்பு /செய்தி /வணிகம் / EV வாங்க கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு இழப்பீடு வழங்க ரிஸ்க்-ஷேரிங் மெக்கானிசம் விரைவில் அறிமுகம்!

EV வாங்க கடன் கொடுக்கும் வங்கிகளுக்கு இழப்பீடு வழங்க ரிஸ்க்-ஷேரிங் மெக்கானிசம் விரைவில் அறிமுகம்!

எலக்ட்ரிக் பைக் மாதிரிப் படம்

எலக்ட்ரிக் பைக் மாதிரிப் படம்

உலக வங்கி மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) ஆகியவற்றுடன் இணைந்து 1 பில்லியன் டாலர் நிதி ($1 billion) ஒதுக்கீடு திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எலெக்ட்ரிக் வாகனம் வாங்குவதற்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ரிஸ்க்-ஷேரிங் மெக்கானிசமை அறிமுகப்படுத்த மத்திய அரசும் உலக வங்கியும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்நிலையில் தான் இந்த தகவல் வெளியாகி உள்ளது. 2 அல்லது 3 சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்காக வாடிக்கையாளரால் எடுக்கப்பட்ட கடன் திருப்பி செலுத்தப்படாமல் இருந்தால் குறிப்பிட்ட வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு நிதி உத்தரவாதங்களை வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் 2 அல்லது 3 சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களை EMI-ல் வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம். அவரால் குறிப்பிட்ட வங்கிக்கு கடனை திருப்பி செலுத்த முடியாமல் போய் விட்டால் அதாவது வங்கிக்கு அது வாரா கடனாகி விட்டால் இந்த 1 பில்லியன் டாலர் நிதியிலிருந்து கடன் வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு நிதி அளிக்கப்படும். NITI ஆயோக் இந்த திட்டத்தின் எளிதாக்கும் நிறுவனமாக இருக்கும். இது EV-க்களுக்கு விரைவான மற்றும் எளிதான நிதியுதவியை கிடைப்பதை எளிதாக்குவத்தை நோக்கமாக கொண்டுள்ளது. துவக்கத்தில் $300 மில்லியன் நிதி இந்த திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Read More : ஏற்கெனவே கட்டிய வீட்டை வாங்கப் போறீங்களா? ஏமாறாமல் இருக்க இதையெல்லாம் செக் பண்ணுங்க!

இதுபற்றி தகவல் தெரிவித்துள்ள உயரதிகாரி ஒருவர், எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கும் விவகாரத்தில் வாடிக்கையாளர் கடன்கள் செலுத்தத் தவறினால் வங்கிகள் அணுகுவதற்கான ஒரு ஹெட்ஜிங் பொறிமுறையாக இந்த திட்டம் இருக்கும். மேலும் இது EV-க்களுக்கு நிதியளிப்பதற்கான செலவை 10-12 சதவீதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். தற்போது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான கடனுக்கு ஆண்டுக்கு 20-25% வட்டி வழங்கப்படுகிறது.

இதனிடையே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திட்டத்தின் முன்னணியாக கருதப்பட்டது. ஆனால் தற்போது வரை EV-ஐ அபாயகரமான பிரிவாக வங்கிகள் கருதுவதால் பார்ட்னர்ஷிப்பில் இருந்து வெளியேறியது. ஈ-ரிக்‌ஷாக்கள் மற்றும் லெட்-அமில பேட்டரிகள் மூலம் இயங்கும் மற்ற இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு நிதியளித்து வாரா கடன் அதிகமானதால் வங்கிகள் இந்தப் பிரிவில் இருந்து தொடர்ந்து பின்வாங்குகின்றன.

இதனை தொடர்ந்து SIDBI (Small Industries Development Bank of India) இப்போது திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக இருக்க உள்ளது. பகுதி கடன் உத்தரவாதம் மற்றும் முதல் இழப்பு ஆபத்து பகிர்வு கருவிகள் (first loss risk sharing instrument) உள்ளிட்டவை நாட்டில் எலெக்ட்ரிக் வாகன இயக்கத்தை அதிகரிக்க மிகவும் பயனுள்ள நிதி தீர்வுகளாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். கடந்த சில மாதங்களாக, EV ஃபைனான்சிங் பிரிவில் பல ஃபின்டெக் நிறுவனங்கள் மற்றும் NBFC-க்கள் அதிக அளவில் போட்டியிட்டு குறைந்த வட்டி விகிதத்தில் ஃபைனான்ஸ் EV-க்களில் அடியெடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சோஹிந்தர் கில் கூறுகையில், அடுத்த 2 ஆண்டுகளில், போட்டி விலை புள்ளிகளில் அதிக மின்சார இரு சக்கர வாகன தயாரிப்புகள் அறிமுகமாகும். இது எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க செய்யும். அப்போது இதற்கேற்ற வேகத்தில் இந்தியாவில் நிதியுதவியை அதிகரிப்பதே தற்போதைய சவாலாக பார்க்கப்படுகிறது என்றார்.

First published:

Tags: Automobile, Electric bike, Electric car