• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கட்டுமான பொருட்களின் விலை கடும் உயர்வு... சிமெண்ட், கம்பிகளுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறதா?

கட்டுமான பொருட்களின் விலை கடும் உயர்வு... சிமெண்ட், கம்பிகளுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறதா?

செங்கல்-ஜல்லி

செங்கல்-ஜல்லி

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என கட்டுமான சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

  • Share this:
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழகத்தில் ஊடரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில், தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. ஆடர்கள் இல்லாததால் செங்கல் சூளைகள், கல் குவாரிகளின் இயக்கமும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது  இதன் காரணமாக கட்டுமான பொருட்கள் மீதான விலை உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 3,500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு யுனிட் ஜல்லி தற்போது 5ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறுது 300 செங்கல் கொண்ட ஒரு லோடு  23ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 27ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல் சிமெண்ட், மற்றும் கட்டுமான கம்பி விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ரூ.350க்கு விற்பனையான ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது 520ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல் ஒரு டன் 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கட்டுமான கம்பி தற்போது 72ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Read More : தமிழ்நாடு முழுவதும் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு: ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

ஜல்லி, செங்கல் போன்ற பொருட்களின் விலை குவாரிகள் செயல்பட தொடங்கினால் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என கூறும் அகில இந்திய கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு, சிமெண்ட் மற்றும் கட்டுமான கம்பி மீதானா விலை உயர்வு என்பது, செயற்கை தடுப்பாடு ஏற்படுத்தி, உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்த்தியிருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Must Read : கொரோனாவால் நுரையீரல் பாதித்த மருத்துவருக்கு உதவ 20 லட்சம் ரூபாய் திரட்டிய கிராம மக்கள்

மூலப்பொருட்கள் மீது விலை உயராதபோது உற்பத்தி நிறுவனங்களின் இந்த விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறும் கூட்டமைப்பினர். மத்திய அரசு சிமெண்ட் மற்றும் ஜல்லி விலையை கட்டுபடுத்த மத்திய அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: