ஜியோவுக்கு உதவ சுமார் ₹ 1 லட்சம் கோடி முதலீட்டில் புதிய நிறுவனம் தொடங்கும் ரிலையன்ஸ்...!

முகேஷ் அம்பானி
- News18
- Last Updated: October 26, 2019, 5:29 PM IST
ஜியோவை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற சுமார் ₹ 1 லட்சம் கோடி முதலீட்டில் புதிய டிஜிட்டல் நிறுவனத்தை தொடங்க ரிலையன்ஸ் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் முழு பங்குகளும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வசம் உள்ளது. இந்த நிலையில், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற புதிய துணை டிஜிட்டல் நிறுவனம் ஒன்றை 1,08,000 கோடி ரூபாய் முதலீட்டில் ரிலையன்ஸ் தொடங்க உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படும் டிஜிட்டல் நிறுவனமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வசமுள்ள ஜியோவின் பங்குகள் புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனத்துக்கு மாற்றப்பட உள்ளது. இதனால், ஜியோ நிறுவனம் மார்ச் 2020-ம் ஆண்டுக்குள் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், "புதிதாக தொடங்கப்பட உள்ள துணை நிறுவனம், டிஜிட்டல் துறையில் உண்மையிலேயே மாற்றங்களைக் கொண்டு வரும் மற்றும் புதிய சேவைகளைக் கொடுக்கும் தளமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Also See...
ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் முழு பங்குகளும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வசம் உள்ளது. இந்த நிலையில், ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தை கடன் இல்லாத நிறுவனமாக மாற்ற புதிய துணை டிஜிட்டல் நிறுவனம் ஒன்றை 1,08,000 கோடி ரூபாய் முதலீட்டில் ரிலையன்ஸ் தொடங்க உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படும் டிஜிட்டல் நிறுவனமும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் வசமுள்ள ஜியோவின் பங்குகள் புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனத்துக்கு மாற்றப்பட உள்ளது.
Also See...