Home /News /business /

ஸ்டெர்லிங் & வில்சன் சோலார் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை கைப்பற்றும் ரிலையன்ஸ்!

ஸ்டெர்லிங் & வில்சன் சோலார் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை கைப்பற்றும் ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

REC சோலார் ஹோல்டிங்ஸை 771 மில்லியன் டாலர்களுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியதாக அறிவித்த சில மணி நேரங்களில், அதன் துணை நிறுவனமான ஸ்டெர்லிங் & வில்சன் சோலார் லிமிடெட் நிறுவனத்தின் 40 சதவிகித பங்குகளை ரூ.2,850க்கு வாங்குவதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
    இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் (RNESL), ஸ்டெர்லிங் & வில்சன் சோலார் லிமிடெட் (SWSL) நிறுவனத்தின் 40 சதவிகித பங்குகளை கையகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னணி சோலார், கொள்முதல் மற்றும் கட்டுமான தீர்வுகள் வழங்குநர் நிறுவனமான ஸ்டெர்லிங் & வில்சன் சோலார் லிமிடெட் நிறுவனத்தின், பங்குகளை முதன்மை முதலீடு, இரண்டாம் நிலை கொள்முதல் மற்றும் திறந்த சந்தை தள்ளுபடி ஆகியவற்றின் மூலம் வாங்குகிறது. இதில்  40 சதவிகித பங்குகளை சுமார் 2,850 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் (RNESL)வாங்குகிறது.

    இந்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக, RNESL ஸ்டெர்லிங் & வில்சன் சோலார் நிறுவனத்தின் 15.46 சதவிகித பங்குகளை ஒரு பங்கிற்கு ரூ.375 வீதம் தோராயமாக சுமார் ரூ .1,100 கோடிக்கு வாங்குகிறது.

    இரண்டாவது கட்டமாக, ஷபூர்ஜி பலோன்ஜி மற்றும் குர்ஷெட் தாருவாலா ஆகியோர் 1.84 கோடி பங்குகளை (சுமார் 9.7 சதவிகிதம் ஈக்விட்டி) RNSEL-க்கு ஒரு பங்கிற்கு ரூ.375 வீதம் விற்பனை செய்கிறார்கள்.

    இதற்கு ரிலையன்ஸ் யூனிட் 25.9 சதவிகித பங்குகளை பொது பங்குதாரர்களுக்கு சலுகை விலையில் புதிய பங்குகளை பெறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

    இந்த திறந்தநிலை சலுகை மூலம் RNSEL நிறுவனத்தின் மொத்த பங்குகள் 40 சதவிகிதமாக உயரத் தவறினால், ஷபூர்ஜி பல்லோன்ஜி மற்றும் தருவாலா ஆகியோர் தங்கள் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்வார்கள்.

    ஸ்டெர்லிங் & வில்சன் சோலார் நிறுவனத்தின் சேவைகள் பெரும்பாலும் பயன்பாட்டு அளவிலான மின் திட்டங்கள் மற்றும் அபுதாபியில் உள்ள உலகின் மிகப்பெரிய ஒற்றை-இருப்பிட மின் நிலையம் உட்பட மொத்தம் 11.4 GWp திறன் கொண்ட உலகளாவிய சேவைகளை கொண்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Reliance

    அடுத்த செய்தி