மார்ச் 2021-ல் கடனே இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் உருவாகும் - முகேஷ் அம்பானி உத்தரவாதம்

முகேஷ் அம்பானி

2019 நிதியாண்டின் இறுதியில் (ஏப்ரல் 2019) ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் தொகை 1.54 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அடுத்த 18 மாதங்களில் கடனே இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் உருவாகும் என ரிலையன்ஸ் 42-வது வருடாந்திர மாநாட்டில் அந்நிறுவனத்தின் சிஇஓ முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

மாநாட்டு நிகழ்வில் முகேஷ் அம்பானி பேசுகையில், “ஜியோ மீது நம்பிக்கை வைத்த இந்திய மக்களுக்கு ஜியோ குடும்பத்தார் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்களின் ஆதரவால் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமாக மட்டுமல்லாது உலகின் இரண்டாம் பெரும் நிறுவனமாகவும் ரிலையன்ஸ் வளர்ந்துள்ளது.

கடனே இல்லாத மிகப்பெரும் நிறுவனமாக ரிலையன்ஸ் உருவாகும். அதற்கான வழித்திட்டத்தை நாங்கள் அமைத்துள்ளோம். இதன் மூலம் அடுத்த 18 மாதங்களில் கடனே இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கும். 2019 நிதியாண்டின் இறுதியில் (ஏப்ரல் 2019) ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் தொகை 1.54 லட்சம் கோடி ரூபாய் ஆக இருந்தது.

சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து கிடைக்கும் அதிகப்படியான வரவேற்பு மற்றும் ஒத்துழைப்பால் நமக்கு முதலீடுகள் அதிகரிக்கும். இதன் மூலம் கடன் இல்லாத நிறுவனமாக உயர்ந்து பங்குதாரர்களுக்கு மிகச்சிறப்பான வெகுமதிகள் அளிக்கப்படும். இதுவரை ரிலையன்ஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிகப்படியான ஈவுத்தொகை (டிவிடண்ட்), போனஸ் என அனைத்திலும் உயர்வு உண்டு” என்றார்.

மேலும் பார்க்க: புதிய திரைப்படம் வெளியாகும் அதே நேரத்தில் இனி வீட்டிலிருந்தே பார்க்கலாம்- அதிரடி அம்சங்களுடன் ஜியோ ஃபைபர்

 

வீடியோ: செப்டம்பர் 5 முதல் வருகிறது ஜியோ பைபர்
Published by:Rahini M
First published: