Home /News /business /

நியூயார்க்கின் ஆடம்பர ஹோட்டலான மாண்டரின் ஓரியண்டலை கையகப்படுத்தும் ரிலையன்ஸ்

நியூயார்க்கின் ஆடம்பர ஹோட்டலான மாண்டரின் ஓரியண்டலை கையகப்படுத்தும் ரிலையன்ஸ்

மாண்டரின் ஓரியண்டல்

மாண்டரின் ஓரியண்டல்

மாண்டரின் ஓரியண்டல் பங்குகளை ரிலையன்ஸ் கையகப்படுத்தும் இந்த ஒப்பந்தம் 98.5 மில்லியன் டாலர் மதிப்பில் கையெழுத்தாகியுள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் பரிவர்த்தனைகள் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஆடம்பர ஹோட்டலின் பெரும்பகுதி பங்குகளை தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான Reliance Industrial Investments and Holdings 98.5 மில்லியன் டாலருக்கு வங்கியுள்ளது.

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள   Columbus Circle பகுதியில் மாண்டரின் ஓரியண்டல் சொகுது ஹோட்டல் அமைந்துள்ளது. 2003ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹோட்டல்களில் ஒன்றாக திகழ்கிறது.

    இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான Reliance Industrial Investments and Holdings நிறுவனம் கேமன் தீவுகளில் இணைக்கப்பட்ட நிறுவனமும், மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க்கில் 73.37% பங்குகளின் மறைமுக உரிமையாளருமான கொலம்பஸ் சென்டர் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி,  கொலம்பஸ் சென்டர்  கார்ப்பரேஷனிடம் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலை முழு பங்குகளை வாங்கி முடிவாகியுள்ளது.

    98.5 மில்லியன் டாலர் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2022ம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் பரிவர்த்தனைகள் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்றுள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல், 2018ம் ஆண்டில் 115 மில்லியன் டாலர் வருவாயையும் 2019ம் ஆண்டில் 113 மில்லியன் டாலரும் 2020ம் ஆண்டில் 15 மில்லியன் டாலரும் வருவாய் ஈட்டியுள்ளது.

    இதையும் படிங்க: Jio : ரூ.499 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவை!


    ரிலையன்ஸ் குழுமத்தின் நுகர்வோர் மற்றும் விருந்தோம்பல் பிரிவில் தடம் பதிக்கும் முயற்சியில் முக்கிய நகர்வாக இது உள்ளது. ஏற்கனவே,EIH Ltd (Oberoi Hotels), UK இல் உள்ள Stoke Park Limited ஆகியவற்றில் முதலீடுகளைக் கொண்டுள்ளது மற்றும் BKC மும்பையில் அதிநவீன  மையம், ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளை ரிலையன்ஸ் குழுமம் உருவாக்கி வருகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Mukesh ambani, Reliance, Star Hotels

    அடுத்த செய்தி