Reliance | ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் 4வது காலாண்டு வருமானம் இரட்டிப்பு வளர்ச்சி!

Reliance | ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் 4வது காலாண்டு வருமானம் இரட்டிப்பு வளர்ச்சி!

ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி

டிசம்பர் 2020ல் முடிந்த முந்தைய காலாண்டில் ரிலையன்ஸின் வருமானம் 13,101 கோடி ரூபாயாக இருந்தது.

  • Share this:
தொலைத்தொடர்பு முதல் எண்ணெய் உற்பத்தி வரையிலான தொழில்களை மேற்கொண்டுள்ள நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், 4வது காலாண்டின் ஒருங்கிணைந்த லாபம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் வருமானம் 13,227 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ மற்றும் ரீடெய்ல் தொழில்களில் கிடைத்துள்ள ஏற்றத்தால் இந்த வருமான உயர்வு கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டின்படி, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரிலையன்ஸின் வருவாயானது 129.1% அதிகரித்துள்ளதாகவும், முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது வருமானம் 0.7 % அதிகரித்துள்ளதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் லாபத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி 1 சதவீதமாகும். டிசம்பர் 2020ல் முடிந்த முந்தைய காலாண்டில் ரிலையன்ஸின் வருமானம் 13,101 கோடி ரூபாயாக இருந்தது.

இது குறித்து பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி, “தற்போதைய காலமானது இந்தியாவுக்கு அசாதாரண சவாலான காலமாகும். இந்த பெருந்தொற்று பரவல் காலத்தில் எங்கள் உடனடி முன்னுரிமை என்பது நம் நாட்டிற்கும், நம் சமூகத்திற்கும் உதவுவதே. தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தை வலுப்படுத்துவதில் எங்களது சிறந்த வளங்களை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம்” என்றார்.

பொதுமுடக்கத்தில் இருந்து மீண்டு O2C (oil-to-chemical) மற்றும் ரீடெய்ல் தொழில்கள் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளன. டிஜிட்டல் சேவை தொழில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக ரிலையன்ஸின் O2C துறையின் வருமானம் 20.6% ஆக உயர்ந்து 1,01,080 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது,
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆக்ஸிஜன் தயாரிப்பு: உச்சநீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பாராட்டு!

2021 நிதியாண்டின் தொடக்கத்தில் ரிலையன்ஸ் மும்பை பங்குச்சந்தைக்கு அளித்த தகவலின்படி அந்நிறுவனத்தின் வருவாய் சாதனை அளவாக 53,739 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாக கூறியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 34.8% வளர்ச்சியாகும்.

ஜியோ முந்தைய ஆண்டைக்காட்டிலும் 47.5% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஜியோவின் ஆண்டு நிகர வருவாய் 3,508 கோடி ரூபாயாக உள்ளது.
Published by:Arun
First published: