முகப்பு /செய்தி /வணிகம் / RIL Q2 Result: 2ம் காலாண்டில் ரிலையன்ஸ் நிகர லாபம் - ரூ.15,579 கோடி, வருவாய் - ரூ.1.74 லட்சம் கோடி

RIL Q2 Result: 2ம் காலாண்டில் ரிலையன்ஸ் நிகர லாபம் - ரூ.15,579 கோடி, வருவாய் - ரூ.1.74 லட்சம் கோடி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பெட்ரோலியம், தொலைத்தொடர்பு, ரீடெயில் என பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) சமீபகாலமாக சூரிய ஆற்றல் துறையில்( solar energy segment) தனது கவனத்தை அதிகரித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டு நிதி அறிக்கையை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2ம் காலாண்டில் நிகர லாபம் ரூ.15,579 கோடி என்றும் நிகர வருவாய் ரூ.174 லட்சம் கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) செப்டம்பர் 2021 உடன் முடிவடைந்த காலாண்டில்  ஒருங்கிணைந்த லாபமாக ரூ .15,479 கோடியை அறிவித்தது, இது முந்தைய ஆண்டு காலத்துடன் ஒப்பிடுகையில் 46 சதவிகிதம் அதிகமாகும். அனைத்து வணிகங்களும் கொரோனாவுக்கு முந்தைய நிலைகளை விட 2ம் காலாண்டில்  வளர்ச்சியைக் காட்டியுள்ளன.

முந்தைய ஆண்டு லாபம் ரூ. 10,602 கோடியாகவும், ஜூன் 2021 காலாண்டில் ரூ .13,806 கோடியாகவும் இருந்தது. லாபத்திn தொடர்ச்சியான வளர்ச்சி 12.1 சதவீதம் ஆகும். இதேபோல், 2ம் காலாண்டுக்கான ஒருங்கிணைந்த வருவாய் ரூ .1.74 லட்சம் கோடியாக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் பதிவான ரூ .1.16 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 49.8 சதவீதம் அதிகமாகும்.

”நடப்பு நிதியாண்டின் 2ஆம்  காலாண்டில் ரிலையன்ஸ் வலுவான செயல்திறனை பதிவு செய்துள்ளது. . இது எங்கள் வணிகங்களின் உள்ளார்ந்த பலம் மற்றும் இந்திய மற்றும் உலகளாவிய பொருளாதாரங்களின் வலுவான மீட்சியை நிரூபிக்கிறது. எங்கள் வணிகங்கள் அனைத்தும் கோவிட்-க்கு முந்தைய நிலைகளில் இருந்த வளர்ச்சியை பிரதிபலிக்கின்றன” என்று  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் திருபாய் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.

செயல்பாட்டு மற்றும் நிதி செயல்திறன்  ஆகியவை சில்லறை பிரிவில் சீரான மீட்பையும்,  எண்ணெய் முதல் இரசாயனங்கள் (O2C) மற்றும் டிஜிட்டல் சேவை வணிகத்தில் நிலையான வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். நேரடி கடைகள் மற்றும் டிஜிட்டல் விற்பனையில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கத்தின் காரணமாக ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலாண்டிலும்  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியாவில் பிராட்பேண்ட் சந்தையை மாற்றியமைத்து, தொழில்துறைக்கு புதிய அளவுகோல்களை அமைத்தது எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Reliance Jio: 2ம் காலாண்டில் ரூ.3,528 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ!

4ஜி சேவையில்  ஜியோ நிறுவனம்  தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.செப்டம்பர் 30ம் தேதி முடிவில் ஜியோவின் மொத்த பயனர்களின் எண்ணிக்கை 42.95 கோடி (429.5 million ) ஆகும். இதில், 2.38 கோடி பேர் புதிய பயனர்கள் ஆவர்.

இதேபோல், ரிலையன்ஸ் சில்லறை விற்பனை  9.2 சதவிகித வளர்ச்சியைக் கொண்டு வலுவான செயல்திறனை வழங்கியது.ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் ஆகியவற்றில் கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம் நிறுவியது. நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் மளிகை பொருட்கள் வலுவான வளர்ச்சி வேகத்தை  தக்கவைத்தன என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

காலாண்டில் சில்லறை வணிக லாபம்74.2 சதவீதம் அதிகரித்து  ரூ.1,695 கோடியாக இருந்தது.  எண்ணெய்யில் இருந்து ரசாயனம்  வணிகத்தில்  (Oil-To-Chemicals Business) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 58.1 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.  வருவாய் 1.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2030 க்குள் இந்தியாவில் 100 GW வரை சூரிய சக்தியை நிறுவவும், செயல்படுத்தவும்  மற்றும் புதுப்பிக்கத்தக்க தொழிலில் உலகளாவிய நிறுவனமாக மாறவும் திட்டமிட்டுள்ளது. இதனால்,  சூரிய ஆற்றல் பிரிவில் அதன் கவனம் அதிகரித்துள்ளது.  ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் (RNESL) ஜெர்மனியில் பசுமை சூரிய மின் தகடுகளை உற்பத்தி செய்துவரும் நெக்ஸ்வேஃப் நிறுவனத்தின்   86,887  பங்குகளை கையப்படுத்தியது.

First published:

Tags: Reliance, Reliance Jio, Reliance Retail