காலாண்டில் பங்கு விற்பனை மூலம் ₹ 53,124 கோடி ரூபாயை திரட்டிய ரிலையன்ஸ் ஜியோ

நாட்டிலேயே முதல்முறையாக உரிமைப்பங்கு விற்பனை மூலம் ரிலையன்ஸ் குழுமம் ஜூன் மாதம் நிறைவடைந்த காலாண்டில் 53,124 கோடி ரூபாயை திரட்டியுள்ளது.

காலாண்டில் பங்கு விற்பனை மூலம் ₹ 53,124 கோடி ரூபாயை திரட்டிய ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ
  • Share this:
ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டு நிதி அறிக்கையை ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ளது. அதில், நிதி சாராத நிறுவனங்களில் உரிமைப் பங்கு விற்பனை மூலம் உலகில் மிக அதிக தொகையை ஜியோ குழுமம் திரட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட 13 நிறுவனங்கள் வாங்கியlதில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 56 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டதாகவும் பெருமிதத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காலாண்டில் ரிலையன்ஸ் குழுமம், ஒரு லட்சத்து 929 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளதாகவும், கொரோனா நெருக்கடிக்கிடையிலும் காலாண்டு நிகர லாபம் 30.6 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட, 13 ஆயிரத்து 248 கோடி ரூபாய் முதலீடு ஈட்டியுள்ளதுடன் ரொக்க லாபமும் 16.7 சதவீதம் அதிகரித்து 18 ஆயிரத்து 893 கோடி ரூபாய் ரொக்க லாபம் கிடைத்துள்ளது.
படிக்க: முழு ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது...?படிக்க: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை - கணவன் வெறிச்செயல்


படிக்க: ’ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்’ ஹர்திக் பாண்டியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
இதுபோல் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 39 கோடியே 20 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், காலாண்டில் 2 ஆயிரத்து 520 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஜியோ ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிலையன்ஸ் குழும அதிபர் முகேஷ் அம்பானி, இந்திய மற்றும் உலகளாவிய பிரபல நிறுவனங்களுடன் இணைந்துள்ளதன் மூலம் 130 கோடி இந்தியர்களின் தேவைகள் நிறைவு செய்ய பாடுபடுவோம் என்றும் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு தலையாய பங்கு வகிப்பதில் கவனம் செலுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading