ஒரு மாதத்தில் 80 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ!

ஏர்டெல் நிறுவனம் 30.28 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் நிறுவனம் 10.58 லட்சம் வாடிக்கையாளர்களையும் வாடிக்கையாளர்கள் இழந்துள்ளன.

news18
Updated: June 25, 2019, 7:37 AM IST
ஒரு மாதத்தில் 80 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ!
ஜியோ நிறுவனம்
news18
Updated: June 25, 2019, 7:37 AM IST
தொலைத்தொடர்புத் துறையில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் ஜியோ முன்னோடியாக உள்ளதாகத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 80 லட்சத்து, 82 ஆயிரம் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 31 கோடியே 48 லட்சமாக அதிகரித்துள்ளது. செல்போன் வாடிக்கையாளர் குறித்து, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிக்கை வெளியிட்டுள்ளது.


அதில், வாடிக்கையாளர்களைக் கவருவதில் தொடர்ந்து ஜியோ முன்னோடியாகத் திகழ்வதாகத் தெரிவித்துள்ளது. இந்த வரிசையில், பிஎஸ்என்எல்- வாடிக்கையாளர்கள் கடந்த மாதம் 2 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரித்து, மொத்தம் 11 கோடியே 59 லட்சமாகியுள்ளது.

அதேவேளையில், ஏர்டெல் நிறுவனம் 30.28 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடபோன் நிறுவனம் 10.58 லட்சம் வாடிக்கையாளர்களையும் வாடிக்கையாளர்கள் இழந்துள்ளன.

லேண்ட்லைன் இணைப்புகளைப் பொருத்த வரையில் ஏர்டெல் 36,686 வாடிக்கையாளர்களையும், வோடோஃபோன் ஐடியா 8,829 வாடிக்கையாளர்களையும் கூடுதலாகப் பெற்றுள்ளன.

Loading...

மேலும் பார்க்க:
First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...