• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஜெர்மனியின் நெக்ஸ்வேஃப் நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு!

ஜெர்மனியின் நெக்ஸ்வேஃப் நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு!

ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ்

ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட்(RNESL) பசுமை சூரிய மின் தகடுகள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஜெர்மனியின் நெக்ஸ்வேஃப் ( Nexwafe) நிறுவனத்தில்  29 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 218 கோடி ரூபாய்) முதலீடு செய்யவுள்ளது. 

  • Share this:
    இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் (RNESL) ஜெர்மனியில் பசுமை சூரிய மின் தகடுகளை உற்பத்தி செய்துவரும் நெக்ஸ்வேஃப் நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட்(RNESL) பசுமை சூரிய மின் தகடுகள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஜெர்மனியின் நெக்ஸ்வேஃப் ( Nexwafe) நிறுவனத்தில்  29 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 218 கோடி ரூபாய்) முதலீடு செய்யவுள்ளது.  உயர் தரத்திலான மோனோக்ரிஸ்டலின் சிலிக்கான் தகடுகளை நெக்ஸ்வேஃப் நிறுவனம்  உற்பத்தி செய்து வருகிறது.

    இந்த முதலீடு மூலம் நெக்ஸ்வேஃப் நிறுவனத்தின் சிரீஸ் சி (Series C) மூலோபாயத்தின் முன்னணி முதலீட்டாளராக ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் இருக்கும். ஒரு பங்கின் விலை 287.73 யூரோ என்ற கணக்கில்  86,887  பங்குகளை கையகப்படுத்துவதற்கு அந்நிறுவனத்திடம் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் ஒப்பந்தம் போட்டுள்ளது.  RNESL க்கு 36,201 வாரண்டுகளும் வழங்கப்படும்.

    நெட்வேஃப் நிறுவனத்தின் உள்ள தனியுரிம தொழில்நுட்பம் மூலம் ஒளிமின்னழுத்த (PV) செல்களை உற்பத்தி செய்வதற்கான செலவை வெகுவாகக் குறைக்க முடியும். எனவே,  இந்த தொழில்நுட்பம், மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் குறைந்த விலை வடிவமாக  சூரிய ஒளிமின்னழுத்தங்களை (solar photovoltaics) மாற்ற முடியும் என்றும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தெரிவித்துள்ளது.

    உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு விநியோகம்  செய்வதற்காக, இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான சோலர் தகடுகளை உற்பத்தி செய்வதற்கான வசதிகளை அமைக்க நெக்ஸ்வேஃப்பின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த  ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

    அதிக திறன்கொண்ட மோனோக்ரிஸ்டலின் பசுமை சோலர் தகடுகளை ஒருங்கிணைத்து உருவாக்குவதுமற்றும் வணிகமயமாக்கல் செய்வது தொடர்பான  இந்திய மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் மற்றும் நெக்ஸ்வேஃப் கையெழுத்திட்டுள்ளன.  சூரிய சக்தி மூலம் 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் ரிலையன்ஸின் இலக்கை எட்டுவதற்கான  அடுத்த அடியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில்  அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ .75,000 கோடி முதலீடு செய்கிறது. குஜராத்தின் ஜாம்நகரில் பசுமை எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் உற்பத்திக்காக மிகப்பெரிய ஆலையை அமைப்பதும் இதில் அடக்கம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: