ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் 44வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, அடுத்த மூன்று ஆண்டுகளில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யக்கூடிய ஒரு மெகா பசுமை எரிசக்தி திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.
சந்தை மூலதனத்தால் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 44 வது ஆண்டு பொதுக் கூட்டம் கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் உரையாற்றிய ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, “ரிலையன்ஸ் மற்றும் இந்தியாவுக்கான அடுத்த பெரிய மதிப்பு உருவாக்கும் இயந்திரத்தை உருவாக்குவதற்கான எங்கள் பார்வையை கடந்த ஆண்டு உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் - எங்கள் புதிய எரிசக்தி மற்றும் புதிய பொருட்கள் வணிகம். அதே போல 2035ம் ஆண்டுக்குள் கார்பன் மாசு இல்லாத நிலையை ஏற்படுத்தும் 15 ஆண்டு திட்டம் குறித்தும் அறிவித்திருந்தேன்.
அந்த லட்சத்தியத்தை அடைவதற்கான செயல்திட்டத்தினை இன்று உங்களுக்கு வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பேசிய முகேஷ் அம்பானி மூன்று உறுதிமொழிகளை அளித்தார்.
Also Read: Jio Institute: ஜியோ இன்ஸ்டிடியூட் இந்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் - நீடா அம்பானி அறிவிப்பு!
முதலாவதாக, உலகின் மிகப்பெரிய எரிசக்தி சந்தைகளில் ஒன்றாக, உலகளாவிய எரிசக்தி நிலப்பரப்பை மாற்றுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.
இரண்டாவதாக, எப்போதும் எதிர்காலத்தில் வளர்ந்து வரும் வணிகங்களில் கவனம் செலுத்தும் நிறுவனமான ரிலையன்ஸ் எங்கள் இருப்புநிலை, திறமை, தொழில்நுட்பம் மற்றும் நிரூபிக்கப்பட்ட திட்ட செயல்படுத்தல் திறன்களின் ஒருங்கிணைந்த வலிமைக்கு தலைமைத்துவத்தை வழங்கும்.
மூன்றாவதாக, ரிலையன்ஸ் தனது புதிய எரிசக்தி வணிகத்தை உண்மையான உலகளாவிய வணிகமாக மாற்றும்” என்றார்.
மேலும், முன்னணி உலகளாவிய பல்கலைக்கழகங்கள், சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் கூட்டணியை ரிலையன்ஸ் உருவாக்கி வருகிறது என அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜாம்நகரில் 5000 ஏக்கர் பரப்பளவில் திருபாய் அம்பானி பசுமை எரிசக்தி மையத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டோம் என அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக தெரிவித்த முகேஷ் அம்பானி, இது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி வசதிகளில் ஒன்றாக இருக்கும் என கூறினார்.
ஜிகா ஆலைகள் எனப்படும் 4 ராட்சச ஆலைகளை உருவாக்கி அதில் சோலார் உதிரி பாகங்கள், சோலார் பேட்டரிக்கள், பச்சை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் ஹைட்ரஜனை நிலையான சக்தியாக மாற்றுவது என 4 வகையான உற்பத்தி நடைபெறும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
Also Read: ரிலையன்ஸின் ஒவ்வொரு ஊழியரும் தேசிய கடமை உணர்வோடு செயலாற்றினார்கள் - முகேஷ் அம்பானி
தொடர்ந்து பேசிய அவர், “ரிலையன்ஸ் 2030 க்குள் குறைந்தது 100 ஜிகாவாட் சூரிய சக்தியை நிறுவி இயக்கும். இதில் குறிப்பிடத்தக்க பகுதி கிராமங்களில் கூரை சூரிய மற்றும் பரவலாக்கப்பட்ட சூரிய நிறுவல்களிலிருந்து வரும். இவை கிராமப்புற இந்தியாவுக்கு மகத்தான நன்மைகளையும் செழிப்பையும் தரும் ரிலையன்ஸ் குஜராத் மற்றும் இந்தியாவை உலக சோலார் மற்றும் ஹைட்ரஜன் வரைபடத்தில் வைக்கும். எங்கள் தயாரிப்புகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது (மேட் இன் இந்தியா) இந்தியாவிலிருந்து, இந்தியாவுக்காக மற்றும் உலகத்திற்காக என பெருமையை பறைசாற்றும் இது நமது பிரதமரின் ஆத்மனிர்பார் பாரத்தின் அழைப்பிற்கு ரிலையன்ஸின் மற்றொரு பெரிய பங்களிப்பாக இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mukesh ambani, Reliance, Reliance AGM 2021, Reliance Digital, Reliance Foundation, Reliance Jio