சம்பாதிக்கும் பணத்தை சரியான முறையில் செலவு செய்தும், சரியான முறையில் சேர்த்து வைத்து வாழ்ந்தாலுமே வாழ்க்கையில் பணம் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை நம்மால் தீர்க்க முடியும். அவ்வாறு செய்வதற்கு நம்மிடம் சரியான திட்டமிடல் தேவை. ஒருவர் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக பணம் சம்பாதிக்கிறார். ஆனால்அவருக்கு என்னென்ன தேவைகள் என்பதும், அதற்கேற்றார் போல் திட்டமிட்டு பணத்தை செலவழிக்கிறாரா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.
நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் மேலும் எதிர்கால தேவைகளுக்கு என்று குறிப்பிட்ட சதவீதத்தை சேமித்து வைத்தால் மட்டுமே எந்தவித சிக்கலும் இன்றி நாம் மகிழ்ச்சியாக மனநிறையோடும் பணநிறைவோடும் வாழ்க்கையை நடத்த முடியும். எப்போதுமே நாம் செலவு செய்யும் தொகையை விட நமக்கு வரும் வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். அதற்கென்று சரியான வரவு செலவு பட்டியலையும் நாம் தயார் செய்து வைத்துக் கொள்வது அவசியம். ஒவ்வொரு மாதமும் நமக்குத் தேவையான பொருட்களின் கணக்கெடுப்பும், அவற்றை வாங்குவதற்கு ஆகும் செலவும் நமக்கு வரும் மொத்த வருமானம் ஆகியவற்றையும் நாம் எப்போதும் கணக்கிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் எந்தெந்த காரியங்களுக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் எவ்வளவு சேமித்து வைக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவு இல்லாததினால் தான் இன்றளவும் பலரால் பொருளாதார அளவில் முன்னேற முடியவில்லை. அதற்காக பொருளாதார வல்லுனர்களும் பல செல்வந்தர்களும் நீண்ட காலமாக கடைபிடித்து வருவதும், வலியுறுத்தி வருவதுமான ஒரு விதி தான் இந்த 50-30-20 விதி. அது என்ன 50-30-20 விதி. விவிஃபை இந்தியா பைனான்ஸ் – ன் நிறுவனரும் சிஇஓ –ம் ஆன அணில் பினாபலா இதைப் பற்றி விரிவாக விவரிக்கிறார்.
50-30-20 விதி:
இந்த விதியின்படி ஒருவர் தன்னுடைய ஒரு மாதத்தின் மொத்த வருமானத்தில் 50 சதவீத பணத்தை உணவு உடை இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் 30 சதவீத பணத்தை கேளிக்கை செலவுகளுக்கும், மேலும் நாம் விரும்பிய காரியங்களோ அல்லது பயணங்களையும் மேற்கொள்வதற்கும் மீதமுள்ள 20% பணத்தை எதிர்காலத்திற்கான சேமிப்பாகவும், முதலீடு செய்தும் சேர்த்து வைக்க வேண்டும்.
Also Read : டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.?
இவ்வாறு செய்வதன் மூலம் நாம் தற்போதைய நிகழ்கால வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்து வாழ முடிவதுடன், எதிர்காலத்தில் ஏதாவது அவசர காரியங்களுக்கும் அல்லது மருத்துவ தேவைகளுக்கு கூட நம்மால் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்முடைய சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்து செலவழிக்க முடியும். மேலும் இந்த விதி பெரும்பாலும் அனைத்து சூழ்நிலைகளிலும் அனைத்து விதமான வாழ்க்கை முறையிலும் கண்டிப்பாக உதவக்கூடியது. நீங்கள் தேவையற்ற செலவுகளை குறைத்தும், வருமானத்தை அதிகரித்தும் இந்த விதியை பயன்படுத்தும் போது இது மிகப்பெரும் அளவில் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Also Read : உஷார்.. ஹேக்கர்ஸ் இப்படித்தான் உங்கள் பேங்க் அக்கவுண்டில் இருந்து பணத்தை திருடுகிறார்கள்.!
பே டெயில் நிறுவனத்தின் சி இ ஓ மற்றும் துணை நிறுவனரும் ஆன விகாஸ் கார்க் – ம் இந்த விதியை பற்றி விவரித்து இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். எது எப்படியோ நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சேர்த்து வைக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களால் எதிர்காலத்தில் பொருளாதாரச் சுமையின்றி மகிழ்ச்சியாக இருக்க முடியும். நீங்கள் இந்த விதியை கடைப்பிடிக்க துவங்கிய முதலிலேயே இதன் அருமை உங்களுக்கு தெரியாமல் போகலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு மேலே கூறியுள்ளபடி உங்களின் வருமானத்தையும் செலவையும் கட்டுப்படுத்தி வைத்து இந்த விதியை கடைப்பிடித்து வந்தால் நீண்ட காலத்திற்கு பின் திரும்பிப் பார்க்கும்போது உங்களின் பொருளாதாரம் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்பதையும் இந்த விதி உங்கள் வாழ்க்கையில் எந்த அளவு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் கண்டிப்பாக உணர முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Businessman, Money, Savings