ஹோம் /நியூஸ் /வணிகம் /

கிரிப்டோகரன்சி மூலம் துபாயில் சொத்து வாங்கும் இந்தியர்களுக்கு சிக்கல்!

கிரிப்டோகரன்சி மூலம் துபாயில் சொத்து வாங்கும் இந்தியர்களுக்கு சிக்கல்!

துபாய்

துபாய்

வெளிநாடுகளில் சொத்து வாங்குவது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் விதிகளுக்கு எதிரானது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  ‘கிரிப்டோகரன்சி’ - இதனை எப்படி கையாள்வது என உலகின் வல்லரசு நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை பலவும் குழம்பி வருகின்றன. இந்திய அரசு கிட்டதட்ட கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்கும் அளவிற்கு சென்றது. இதுசம்பந்தமாக பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்றது. இறுதியில் பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட்டில், டிஜிட்டல் சொத்து முதலீட்டில் கிடைக்கும் அனைத்து வருமானத்திற்கும் அதிகப்படியாக 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் கிரிப்ட்டோகரன்சியை பரிமாற்றம் செய்வதற்கும் 1 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

  இதனிடையே துபாய்  கிரிப்டோகரன்சிகளின் தலைநகரமாக மாறி வருகிறது. வளைகுடா நாடுகளை விட ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்க விரும்பும் துபாய் அரசு, வோல்டு டிரேட் சென்டரை கிரிப்டோ சோனாக மாற்றியுள்ளது. இதன் மூலமாக துபாயில் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் வாங்க முடியும். இதனை உலகம் முழுவதும் உள்ள பில்லியனர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

  இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் பலரும் கூட கிரிப்டோகரன்சிகள் மூலமாக துபாயில் சொகுசு வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கி குவித்து வருகின்றனர். துபாயில் கிரிப்டோகரன்சி மூலமாக சொத்து வாங்குவது சட்டப்பூர்வமானது மற்றும் பல்வேறு சலுகைகளைக் கொண்டது என்றாலும், இந்தியாவில் சட்ட மற்றும் வரி சவால்களை எதிர்கொள்ளக்கூடும். சொத்துக்களை வாங்கும் நபர்கள், தங்களது பாஸ்போர்ட் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் பெயரில் சொத்து பதிவு செய்யப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள், இந்தியாவின் வருமான வரி (ஐ-டி) அதிகாரிகள் மற்றும் அமலாக்க இயக்குநரகத்திற்கு (ED) அனுப்பி வைக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  தமிழ்நாடு தொழில் வளர்ச்சி – 4.0 மாநாடு... சிறப்பு அம்சங்கள் என்ன?

  இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் தெரிந்தோ, தெரியாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டறியப்படும். முதலாவதாக, குடியுரிமை பெற்ற இந்தியர் தனது அக்கவுண்ட்டில் இருந்து துபாயில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட இடைத்தரகரின் கணக்கிற்கு கிரிப்டோகரன்சிகளை டிரான்ஸ்பர் செய்தால் சட்டவிரோதமாக எல்லை தாண்டி பணத்தை பரிமாற்றம் செய்ததாக அந்நிய செலாவணி மேலாண்மை (FEMA)சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.

  இரண்டாவதாக முறையான வங்கி பரிவர்த்தனை இல்லாமல், வெளிநாடுகளில் சொத்து வாங்குவது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் விதிகளுக்கு எதிரானது ஆகும். ஒருவேளை வெளிநாட்டில் சொத்து வாங்கியது தொடர்பான விவரங்களை வருமான வரிக் கணக்கில் தாக்கல் செய்யாமல் மறுப்பது அந்நிய செலவாணி மோசடியாக கருதப்படும்.

  Gold rate : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

  துபாயை சேர்ந்த ஆடிட்டரான கரன் பத்ரா கூறுகையில் "பெரும்பாலான இந்தியர்கள் துபாய் ரியல் எஸ்டேட்டில் சொந்தமாக வீடு வாங்கவோ அல்லது முதலீடு செய்யவோ விரும்புகின்றனர். ஆனால் அதற்கு முன்னதாக இரண்டு நாட்டு சட்டங்களையும் நன்கு அறிந்த பொருளாதார வல்லுநர்களை கலந்தாலோசிக்க வேண்டும்” என பரிந்துரைக்கிறார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Dubai