கொரொனாவால் சரிந்த தமிழகத்தின் வருவாய், ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் அதிகரிப்பு

கொரொனாவால் சரிந்த தமிழகத்தின் வருவாய், ஊரடங்கு தளர்வுகளால் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரொனாவால் சரிந்த தமிழகத்தின் வருவாய், ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் அதிகரிப்பு
கோப்பு படம்
  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 1:36 PM IST
  • Share this:
கொரோனா காரணமாக கொண்டு வரப்பட்ட ஊரடங்கால், தமிழகத்தின் வருவாய் பன்மடங்கு குறைந்த நிலையில், தற்போது, வருவாய் அதிகரிக்க தொடங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு கிடைக்க பெற்ற தகவல்களின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் எரிபொருள் மற்றும் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு 3000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வசூலாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5,973 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஊரடங்கு காலத்தில், அதாவது ஏப்ரல் மாதத்தில், இந்த வரி வருவாய் 616 கோடி ரூபாயாக மட்டுமே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க...Gold Rate | தங்கம் விலை இன்றும் குறைந்தது... சவரன் விலை எவ்வளவு?


இந்நிலையில், CARE தரமதிப்பீட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த ஆண்டை காட்டிலும் தமிழக அரசு அதிக அளவில் கடன் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21ஆம் நிதியாண்டில், தற்போது வரை தமிழக அரசு 30,500 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.

இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது சுமார் 117 சதவிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. CARE தரமதிப்பீட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா தாக்கத்தால், தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களும் கடன் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உதாரணமாக, மகாராஸ்டிர மாநிலம் 25,500 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும், 14 சதவிதம் அதிகம். ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள், 17,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டு பெறப்பட்ட கடனை விட 9 சதவிதம் அதிகம் என்று தரமதிப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...கடந்த 5 மாதங்களில் போக்குவரத்துத்துறைக்கு ரூ.250 கோடி இழப்பு

தெலங்கானா கூடுதாலாக 8 சதவிதம், கேரளா 7 சதவிதம், மேற்கு வங்கம் 6 சதவிதம் என, கூடுதலாக கடன் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கடன் அளவு அதிகரித்துள்ள போதும், மிகக்குறைந்த வட்டியில் தான் இந்த கடன்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது சுமார் 6 சதவித வட்டி என்ற அளவில் தான் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதனை திரும்ப செலுத்த 10 முதல் 30 ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், அடுத்த சில ஆண்டுகளுக்கு கடன் சுமை அதிகமாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading