• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ரிடைர்மெண்ட், குழந்தைகள் எதிர்காலம்... எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்?

ரிடைர்மெண்ட், குழந்தைகள் எதிர்காலம்... எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்?

ரிடைர்மெண்ட், குழந்தைகள் எதிர்காலம்

ரிடைர்மெண்ட், குழந்தைகள் எதிர்காலம்

உங்கள் குழந்தையின் உயர் கல்வி செலவிற்குக் கடன் கிடைக்கும். உங்கள் ரிடைர்மெண்ட்டுக்கு கடன் கிடைக்குமா?

  • News18
  • Last Updated :
  • Share this:
    இன்று பல இளம் பெற்றோர்களுக்கு இருக்கும் கேள்வி முதலில் ரிடைர்மெண்ட்டுக்குத் திட்டமிடுவதா? அல்லது குழந்தைகளின் படிப்பு, திருமணச் செலவுகளுக்காக முதலீடு செய்வதா?

    உங்களுக்கு 28 வயதில் குழந்தை பிறக்கிறது. அவர்களுக்கு 17-18 வயது ஆகும் பொது உங்கள் வயது 45-46 ஆக இருக்கும். அப்போது உயர் கல்விக்கு மிகப் பெரிய தொகை தேவைப்படும். ஆனால் ஓய்வூதியம் 58 அல்லது 60 வயதில் தான் கிடைக்கும். எனவே குழந்தைகளின் படிப்புச் செலவு தான் முதலில் வரும் என அதற்கு முதலீட்டைச் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

    ஆனால், உங்கள் குழந்தையின் உயர் கல்வி செலவிற்குக் கடன் கிடைக்கும். உங்கள் ரிடைர்மெண்ட்டுக்கு கடன் கிடைப்பது கடினம்.

    ரிடைர்மெண்ட்டுக்குச் சொந்தமாக செலவு செய்து தான் முதலீட்டைத் தொடங்க முடியும். ஆனால் குழந்தைகள் கல்வி மற்றும் பிற செலவுகளுக்குக் கடன் பெற முடியும். குழந்தைகளின் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம்.

    ரிடைர்மெண்ட் மற்றும் குழந்தைகளின் செலவுகள் இரண்டுக்கும் முதலீட்டைத் தொடங்குவது நல்லது என்பதால் எதற்கு முன்னுரிமை அளிப்பது, எப்படி முதலீட்டைத் தொடங்குவது என்பதை விரிவாக இங்கு பார்ப்போம்.

    ஓய்வு, குழந்தைகளின் பள்ளி படிப்புச் செலவு என இரண்டுக்கும் முன்கூடியே முதலீட்டை தொடங்குவது நல்லது. எவ்வளவு வேகமாக முதலீட்டைத் தொடங்குகிறோமோ அவ்வளவு செலவுகள் குறையும். அதாவது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற முடியும்.

    உதாரணத்திற்கு உங்களது குழந்தையின் வயது 4, அவர் 17 வயதாகும் போது உயர் கல்விக்கு 50 லட்சம் ரூபாய் செலவாகும் என இலக்கு வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால் ஆண்டுக்கு 10 சதவீத லாபம் அளிக்கும் ஒரு திட்டத்தில் மாதம் 15,000 முதல் 16,000 ரூபாய் வரை முதலீடு செய்தால் மட்டுமே 50 லட்சம் ரூபாய் என்ற இலக்கை அடைய முடியும்.

    இதுவே குழந்தையின் வயது 10 எனில் 7 வருடத்தில் 50 லட்சம் ரூபாய் வேண்டும் என்றால் 10 சதவீத லாபம் அளிக்கும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது மாதம் 39,000 முதல் 40,000 ரூபாய் முதலீடு செய்யவேண்டும்.

    ஓய்வுக்குத் திட்டமிடும் போதும் இதே போன்ற நிலை தான் ஏற்படும். எவ்வளவு வேகமாக முதலீட்டைத் தொடங்குகிறோமோ அவ்வளவு செலவு குறையும், லாபம் அதிகரிக்கும். தாமதப்படுத்தினால் இரண்டு வகையான முதலீட்டின் செலவும் அதிகரிக்கும்.

    பெற்றோர்கள் பொதுவாக குழந்தைகளின் எதிர்காலச் செலவுக்குப் பணம் இல்லை என்று சொல்ல விரும்பமாட்டார்கள். அதே நேரம் ஓய்வுக்கும் திட்டமிட வேண்டும் அல்லவா?

    ஒவ்வொரு மாதமும் உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதை முடிவு செய்யுங்கள். பின்னர் குழந்தைகளின் எதிர்காலச் செலவிற்கான இலக்கு மற்றும் உங்கள் ஓய்வு காலத்திற்கு எவ்வளவு பணம் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    அடுத்து ஒரு முதலீட்டு ஆலோசகரை அணுகி இந்த விவரங்களைக் கூறுங்கள். உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியுமோ அதற்குள் இரண்டு சிக்கல்களுக்குமான இலக்கை எட்ட முடிந்தால் சரி. இல்லை எனில் ஓய்வுக்கு முக்கியத்துவம் அளித்துவிட்டு குழந்தைகளின் முதலீட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.

    படிப்புச் செலவிற்கு கூடுதல் பணம் தேவைப்பட்டால் அப்போது கல்வி கடன், உதவித்தொகை போன்றவற்றைப் பெற்று சமாளிக்க முடியும்.

    ஒருவேலை உங்களிடம் நிறுவனத்தில் வேலை செய்தபோது பிடிக்கப்பட்ட பிஎப் பங்களிப்பில் அதிகத் தொகை உள்ளது என்றால், அதன் மூலம் உங்கள் ஓய்வு கால இலக்கை அடைய முடியும் என்றால் குழந்தைகளின் கல்வி செலவுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

    இருந்தாலும், பல பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பிற்கே முன்னுரிமை அளிப்பார்கள். அது நியாயமானது என்றாலும் குடும்ப எதிர்காலத்திற்கு ரிடைர்மெண்ட் மற்றும் குழந்தைகளின் படிப்பு இரண்டும் முக்கியம் என்பதைச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

    மேலும் பார்க்க: ஊழலை ஒழிப்பது மட்டுமே குறிக்கோள்: கமல்ஹாசன் சூழூரை!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: