6 மாதங்களில் இல்லாத அளவு மே மாதத்தில் 6.3% ஆக உயர்ந்த சில்லறை பணவீக்கம்!

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்து மே மாதத்தில் 12.94 சதவீதமாக உயர்ந்தது.

  • Share this:
நாட்டின் சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில் 6.3% ஆக உயர்ந்துள்ளது. உணவு பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரித்ததை அடுத்து, சில்லரை விலை பணவீக்கமும் அதிகரித்துள்ளது.இந்த உயர்வு கோவிட் -19 தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த பணவீக்க ரிசர்வ் வங்கியின் கட்டுப்படுத்த வேண்டிய இலக்கை விட அதிகமாகும். புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டை (சிபிஐ) அடிப்படையாகக் கொண்ட சில்லறை பணவீக்கம் 4.29% ஆக குறைந்தது, மாத அடிப்படையில், குறியீட்டு எண் 1.62% உயர்ந்தது. அதே போல நுகர்வோர் உணவு விலைக் குறியீடு ஏப்ரல் மாதத்தில் 1.96 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 5.01 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று MoSPI-ன் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்து மே மாதத்தில் 12.94 சதவீதமாக உயர்ந்தது. மொத்த விலைக் குறியீட்டு (wholesale price index ) அடிப்படையிலான பணவீக்கத்தில் இது தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாகும்.

நுகர்வோர் உணர்வு மற்றும் கிராமப்புற தேவை ஆகியவற்றில் கோவிட் -19 தொற்று நோயின் தாக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகளின் காரணமாக அதிகரித்து வரும் சில்லறை விலை அழுத்தத்தை ரிசர்வ் கவனிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறைச்சி, மீன், முட்டை, எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள் போன்ற புரதப் பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக, ஏப்ரல் மாதத்தில் 2%-ஆக இருந்த உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 5 சதவீதமாக உயர்ந்ததை சில்லறை பணவீக்கத்திற்கான தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள தரவு காட்டுகிறது.

தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெற்ற மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் சில்லறை விலையை மத்திய அரசு அதிகரித்ததால் எரிபொருள் மசோதா 11.6% உயர்ந்தது. தவிர தொற்று நோயின் இரண்டாவது அலை காரணமாக சுகாதாரம், போக்குவரத்து மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு செலவுகள் அதிகரித்ததால் சேவை பணவீக்கமும் (Services inflation) உயர்ந்தது. இதுப்பற்றி பேசியுள்ள ஐ.சி.ஆர்.ஏ மதிப்பீடுகளின் தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர், மே மாதத்தில் காய்கறி விலை 2.6% உயர்ந்தது. பருப்பு வகைகளில் பணவீக்கம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2,3% அதிகரித்துள்ளது.

ஹவுசிங் பணவீக்கம் (Housing inflation ) மே மாதத்தில் 5.3% ஆக பதிவாகியுள்ளது. சுகாதார பணவீக்கம் மே மாதத்தில் 8.4% ஆக உயர்ந்தது. ஆடை மற்றும் காலணி பணவீக்கம் கடந்த மாதம் 5.3% ஆக இருந்தது. முக்கிய சில்லறை பணவீக்கம் நிலையற்ற உணவு மற்றும் எரிபொருள் பொருட்களை விலக்கி, மே மாதத்தில் 83 மாத உயர்வான 6.6% ஆக உயர்ந்தது. 2022-ஆம் நிதியாண்டு சராசரி சில்லறை பணவீக்கத்திற்கான எங்கள் கணிப்பை குறைந்தபட்சம் 5.4% ஆக உயர்த்தியுள்ளோம். இந்த நிதியாண்டு முழுவதும் சில்லறை பணவீக்கம் 5%-க்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

நைட் பிராங்க் இந்தியா நிறுவனத்தின் தலைமை பொருளாதார வல்லுனர் ரஜனி சின்ஹா பேசுகையில், பணவீக்க அதிகரிப்பு உணவு, எரிபொருள் மற்றும் முக்கிய பணவீக்கம் உள்ளிட்ட அனைத்து கூறுகளிலும் உள்ளது. வணிகங்களைப் பொறுத்தவரை, மூலப்பொருட்களின் விலையைத் தவிர, தொழிலாளர் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக தொழிலாளர் விலையும் உயர்ந்துள்ளது என்றார். 5% மேல் உணவு பணவீக்கம், சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் ஒப்பீட்டளவில் அதிக பணவீக்கத்திற்கு வழிவகுத்ததாக குறிப்பிட்டார். மே மாதத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் இருந்த போதிலும் அதிக பணவீக்கம் உள்ளது மற்றும் இது பெரும்பாலும் விநியோக பக்க பிரச்சினையாகத் தெரிகிறது. குறைந்த தொழில்துறை திறன் பயன்பாடு இருந்தபோதிலும் உயர் பணவீக்கம் கவலைக்கு ஒரு காரணம் என மில்வுட் கேன் இன்டர்நேஷனலின் (Millwood Kane International) நிறுவனர் நிஷ் பட் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: