முகப்பு /செய்தி /வணிகம் / 3-வது முறையாக உயர்த்தப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் - கடன் வட்டி விகிதம் உயர வாய்ப்பு

3-வது முறையாக உயர்த்தப்பட்ட ரெப்போ வட்டி விகிதம் - கடன் வட்டி விகிதம் உயர வாய்ப்பு

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தொடர்ந்து 3-வது முறையாக உயர்த்தியுள்ளது. இதனால் வாகன, வீடு மற்றும் தனிநபர்களுக்கான கடன் வட்டி விகிதம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பணிவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்துக்கொண்டே செல்வதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மே மாதம் 4-ந்தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, ரெப்போ வட்டி விகிதத்தை 0, 40 புள்ளிகள்உயர்த்தியது. இதனால் வட்டி விகிதம் 4.40 சதவிகிதமாக அதிகரித்தது. தொடர்ந்து ஜூன் 8- ஆம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்ததால், 4.9 சதவீதமாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் ரெப்போ வட்டி விகிதம் 0.50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. .

இரு மாத நாணய கொள்கை முடிவில் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் வீட்டுக்கடன், வாகன கடன், தனி நபர் கடன் வாங்குபவர்களும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் வாங்கும்போது கூடுதலாக வட்டி கட்ட வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால் இனி மாத தவணை கட்டணம் உயரும் அல்லது தவணை ஆண்டுகள் கூடும்.’

Also Read:  அவசர தேவைக்கு கடன் கூட பெறலாம்.. மிகச் சிறந்த பென்சன் சேமிப்பு திட்டம் இதோ!

உதாரணத்திற்கு ஒருவர் 20 ஆண்டுகள் செலுத்தும் வகையில் 35 லட்ச ரூபாய் கடன் பெற்றால், வட்டி விகித அதிகரிப்பிற்கு முன் 25 ஆயிரம் தவணை செலுத்த வேண்டியிருக்கும், தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 35 லட்ச ரூபாய் கடன் பெற்றால் மாத தவணை ஆயிரம் ரூபாய் அதிகரித்து 26 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டுக்கடன் மட்டுமல்லாமல் வாகனம் மற்றும் தனிநபர் கடன் வட்டிகளும் அதிகரிக்கும். அதே நேரத்தில் வங்கிகள், நிரந்திர வைப்பு தொகைக்கான வட்டியை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு கடன் பெற்றவர்களுக்கு பாதகமாகவும், வைப்பாளர்களுக்கு சாதகமாகவும் பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Home Loan, Loan, RBI, Repo rate