Home /News /business /

கிரெடிட் ஸ்கோர் பிழை தொடர்பாக உங்கள் புகார் தீர்க்கப்படவில்லையா.? ரிசர்வ் வங்கியின் உதவி பெறலாம்.!

கிரெடிட் ஸ்கோர் பிழை தொடர்பாக உங்கள் புகார் தீர்க்கப்படவில்லையா.? ரிசர்வ் வங்கியின் உதவி பெறலாம்.!

இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி

Reserve Bank of India | பொதுவாக கிரெடிட் பியூரோக்கள் என்றும் அழைக்கப்படும் கிரெடிட் தகவல் நிறுவனங்கள் (CICs), வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிலிருந்து வாடிக்கையாளர்களின் டேட்டாவை சேகரிக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கடன் தகவல் நிறுவனங்கள் (CICs -credit information companies) வழங்கிய கடன் அறிக்கைகளில் முரண்பாடுகள் இருக்கும் பிரச்சனையை கடன் வாங்கும் தனிப்பட்ட நபர்கள் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடுகிறது. CIBIL, Experian மற்றும் Equifax போன்ற கிரெடிட் இன்பர்மேஷன் அமைப்புகள் அல்லது நிறுவனங்களால் கடன் அறிக்கையில் சிக்கல்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் நிதி பின்னடைவை சந்திக்க நேரிடுகிறது.

உதாரணமாக சரியாக கடன்களை செலுத்தியும் அறிக்கைகளில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக ஒருவரது கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன அல்லது மோசமான கிரெடிட் ஸ்கோருக்கு வழவகுக்கின்றன. பொதுவாக கிரெடிட் பியூரோக்கள் என்றும் அழைக்கப்படும் கிரெடிட் தகவல் நிறுவனங்கள் (CICs), வங்கிகள், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிலிருந்து வாடிக்கையாளர்களின் டேட்டாவை சேகரிக்கின்றன. சேகரிக்கப்பட்ட டேட்டாவை பொறுத்து, இந்த CIC-க்கள் வாடிக்கையாளர் வாங்கிய கடனை முறையாக செலுத்துபவரா அல்லது மோசமான முறையில் திருப்பி செலுத்துபவரா என்பதை குறிக்கும் மதிப்பெண்ணை வழங்குகின்றன.

இந்நிலையில் இப்போது ரிசர்வ் வங்கி CICs-க்கள் செய்யும் பிழைகளை கண்காணிக்க மற்றும் திருத்த உரிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இப்போது CICs செய்யும் பிழைகளால் பாதிக்கப்படும் கடன் வாங்குபவர்கள், ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டத்தின்படி(RB-IOS) 2021, கடன் தகவல் நிறுவனங்களுக்கு எதிரான இத்தகைய குறை அல்லது பிழைகளை புகார்களாக பதிவு செய்யலாம். சமீபத்தில் பணவியல் கொள்கை மறுஆய்வு அறிக்கையின் போது பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், Reserve Bank-Integrated Ombudsman Scheme என்பது CIC-க்களுக்கு எதிரான குறைகளுக்கு செலவில்லாத மாற்று தீர்வு வழிமுறையை வழங்கும் என்று குறிப்பிட்டார். இந்த திட்டத்தை சரியாக செயல்படுத்த CIBIL, CRIF Highmark, Equifax மற்றும் Experian ஆகியவையும் ஒரு உள்-குறைதீர்ப்பு கட்டமைப்பை அமைக்க வேண்டும்.



தற்போது CIC-க்களுக்கு எதிராக புகார்கள் உள்ளவர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் அந்த குறைகளுக்கு பதிலளிக்கத் தவறினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல எந்த வழியும் இல்லை. ஆனால் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பு, இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். இது போன்ற புகார்களை குறைதீர்ப்பு அதிகாரி ஏற்று கொண்டவுடன், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் பிரபல நிதி ஆலோசகர் வி.என்.குல்கர்னி. இந்த புதிய ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டமானது ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களை உள்ளடக்கியது. இதில் திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்) மற்றும் 50 கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகை கொண்ட திட்டமிடப்படாத முதன்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்டவை அடங்கும்.

Also Read : கடன் கேட்டு இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை அழைக்கக்கூடாது.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

credit information companies-ஆல் நீங்கள் பாதிக்கப்பட்டால் ஆன்லைனில் புகார் செய்ய, https://cms.rbi.org.in என்ற வெப்சைட்டை பயன்படுத்தலாம். இது தவிர CRPC@rbi.org.in என்ற மெயில் ஐடி-க்கு மெயில் அனுப்புவதன் மூலமோ அல்லது 14448 என்ற டோல் ஃப்ரீ நம்பருக்கு தொடர்பு கொள்வதன் மூலமோ உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
Published by:Selvi M
First published:

Tags: India, Reserve Bank of India

அடுத்த செய்தி