Home /News /business /

’வங்கி’ என்ற வார்த்தையை ரெப்கோ பயன்படுத்த தடை.. உயர் நீதிமன்றம் அதிரடி!

’வங்கி’ என்ற வார்த்தையை ரெப்கோ பயன்படுத்த தடை.. உயர் நீதிமன்றம் அதிரடி!

ரெப்கோ

ரெப்கோ

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரவணன், 'வங்கி என்ற வார்த்தையை பயன்படுத்த ரெப்கோவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

ரிசர்வு வங்கி அங்கீகாரம் பெறாததால் 'வங்கி' என்ற வார்த்தையை பயன்படுத்த ரெப்கோவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

1969 ஆம் ஆண்டு அகதிகளுக்காக துவங்கப்பட்ட ரெப்கோ வங்கி சென்னை கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ரெப்கோவை வங்கியாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசும் வங்கி என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்தது.

இத்தனை வகை வங்கி மோசடிகள் நடக்குதாம்.. மக்களே உஷார்!

இந்த உத்தரவுகளை மீறி தொடர்ந்து ' வங்கி' என்ற வார்த்தையை பயன்படுத்தப்பட்டு வருவதை எதிர்த்து அகில இந்த அகதிகள் நலச்சங்க தலைவர் ஜீவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த ஏப்ரல் மாதம் வரை தமிழக பொது மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர் தலைமையில் ரெப்கோ இயங்கி வந்த நிலையில், அதன் பிறகு தனியார் வசம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஹோம் லோனில் EMI கட்ட தாமதமானால் அடுத்து என்ன நடக்கும் தெரியுமா?

மேலும், 'வங்கி' என்ற தோற்றத்தை ஏற்படுத்தி சட்ட விரோதமாக இதுவரை சுமார் 8 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வரை பொதுமக்களின் முதலீட்டை  ரெப்கோ பெற்றுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது. எனவே, ரெப்கோ இனி 'வங்கி' என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.இதனை பதிவு செய்த நீதிபதி சரவணன், 'வங்கி என்ற வார்த்தையை பயன்படுத்த ரெப்கோவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பாக ஜூலை 28 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ரெப்கோவுக்கு உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Bank, RBI, Reserve Bank of India

அடுத்த செய்தி