Home /News /business /

நீங்கும் யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள்! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

நீங்கும் யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள்! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

யெஸ் வங்கி (கோப்புப் படம்)

யெஸ் வங்கி (கோப்புப் படம்)

மத்திய அமைச்சகம் யெஸ் வங்கியின் மீட்புக்காக எடுத்த துரித நடவடிக்கையால் வர்த்தகத்தில் யெஸ் வங்கியின் பங்குகள் 58 சதவிகித உயர்வு பெற்றன.

  • News18
  • Last Updated :
    யெஸ் வங்கி மீது ஆர்.பி.ஐ விதித்த கட்டப்பாடுகள் வரும் புதன்கிழமை 6 மணியிலிருந்து நீக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

    மார்ச் 18-ம் தேதி முதல் யெஸ் வங்கியின் அத்தனை சேவைகளும் புத்துயிர் பெற்று செயல்பாட்டுக்கு வரும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சகம் யெஸ் வங்கியின் மீட்புக்காக எடுத்த துரித நடவடிக்கையால் வர்த்தகத்தில் யெஸ் வங்கியின் பங்குகள் 58 சதவிகித உயர்வு பெற்றன.

    கடந்த மார்ச் 5-ம் தேதி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளுக்குக் கீழ் வந்த யெஸ் வங்கி தற்போது யெஸ் வங்கி நிர்வாகப் பொறுப்பை பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரிடம் வங்கியுள்ளது. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக மத்திய அரசின் ஒப்புதலுடன் எஸ்பிஐ வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.



    இதனுடன் ஐடிஎஃப்சி வங்கி, பந்தன் வங்கி, ஃபெடரடல் வங்கி, ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி, கொட்டாக் மஹிந்திரா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய வங்கிகளும் 100 கோடி ரூபாய் முதல் 1,000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்துள்ளன. இதனால் யெஸ் வங்கியின் பங்குகள் சந்தையில் உயரத் தொடங்கியுள்ளன. யெஸ் வங்கி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ‘இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதுயெஸ் வங்கியின் பணத்தை சேமித்துவைத்திருக்கும் முதலீட்டாளர்கள் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய பணம் பாதுகாப்பாக உள்ளது. யெஸ் வங்கி மீது ஆர்.பி.ஐ விதித்துள்ள கட்டுப்பாடுகள் வரும் புதன்கிழமை மாலை 6 மணியிலிருந்து நீக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

    மேலும் பார்க்க: ஆக்சிஸ் வங்கிக் கணக்கை மூடிய மாநில அரசு..!
    Published by:Rahini M
    First published:

    அடுத்த செய்தி