Home /News /business /

குறைந்த விலையில் 5ஜி ஃபோன் அறிமுகம் - ரிலையன்ஸின் புதிய அறிவிப்பு!

குறைந்த விலையில் 5ஜி ஃபோன் அறிமுகம் - ரிலையன்ஸின் புதிய அறிவிப்பு!

கோப்பு படம்

கோப்பு படம்

ஏற்கனவே கடந்த ஆண்டு, ரிலையன்ஸ் நிறுவனமும் கூகுள் நிறுவனமும் இணைந்து ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் என்ற ஆண்ட்ராய்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்ட மாநாட்டில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றினார்.  அப்போது, ரிலையன்ஸ் நிறுவனம், உலகின் அதிவேகமான 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரித்த அவர்,  இதனை தொடர்ந்து  5ஜி ஃபோன்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.

    இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி பேசும் போது, “ஜியோ ஃபிக்ஸட் லைன் நெட்வொர்க் மூலம் 5ஜி இணைய சேவை வழங்கப்படவுள்ளது. அதிக தரம் வாய்ந்த, தேவைக்கு அதிகமான, எல்லா நேரங்களிலும் பயன்படுத்தக்கூடிய ஃபைபர் ஆப்டிக் சேவையை வழங்குவதே எங்கள் குறிக்கோள். இந்தியாவின் எல்லா மூலைகளில் இருந்தும் டேட்டாவை கடத்தி செல்வதும் அதை மற்ற நாடுகளுடன் இணைப்பதும் தான் இது செய்யக்கூடிய வேலை. ஜியோவின் இந்த அகில இந்திய ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்கின் நீலம் 11 லட்சம் கிலோ மீட்டர் எனவும் இது உலகத்தின் சுற்றளவை விட 27 மடங்கு அதிகம்.” என கூறினார்.

    இதையும் வாசிக்க:  தீபாவளி முதல் ஜியோ 5G சேவை.. ரிலையன்ஸ் ஆண்டுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பு

    ஏற்கனவே கடந்த ஆண்டு, ரிலையன்ஸ் நிறுவனமும் கூகுள் நிறுவனமும் இணைந்து ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் என்ற ஆண்ட்ராய்ட் ஃபோனை அறிமுகப்படுத்தியது. இது இந்திய சந்தைக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டது. இதேபோல் குறைந்த விலையில் ஜியோ தனது 5ஜி ஃபோனை விரைவில் அறிமுகப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பணியாற்றி வருவதாக தனது உரையில் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: 5G technology, Google, Reliance, Reliance AGM 2022, Smart Phone

    அடுத்த செய்தி