போதி ட்ரீ சிஸ்டம்ஸ் உடன் கைகோர்த்த ரிலையன்ஸ் மற்றும் வயாகாம் 18 நிறுவனங்கள்!
போதி ட்ரீ சிஸ்டம்ஸ் உடன் கைகோர்த்த ரிலையன்ஸ் மற்றும் வயாகாம் 18 நிறுவனங்கள்!
போதி ட்ரீ சிஸ்டம்ஸ் உடன் கைகோர்த்த ரிலையன்ஸ் மற்றும் வயாகாம் 18 நிறுவனங்கள்!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் 18 மற்றும் அமெரிக்க ஊடக நிறுவனமான வயாகாம், கூட்டு சேர்ந்து வயாகாம் 18 என்ற பெயரில், இந்தியாவில் கலர்ஸ் டிவி மற்றும் ஓடிடி இயங்குதளமான வூட் (VOOT) உட்பட 38 சேனல்களை இயக்கி வருகிறது.
ரிலையன்ஸ் மற்றும் வயாகாம்18 நிறுவனங்கள் போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளன. ஜேம்ஸ் முர்டோக்கின் லூபா சிஸ்டம்ஸ் மற்றும் உதய் ஷங்கர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் இந்த போதி ட்ரீ சிஸ்டம்ஸ் உடன் கைகோர்ப்பதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய டிவி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் நிறுங்களில் ஒன்றாக அமைய உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் 18 மற்றும் அமெரிக்க ஊடக நிறுவனமான வயாகாம், கூட்டு சேர்ந்து வயாகாம் 18 என்ற பெயரில், இந்தியாவில் கலர்ஸ் டிவி மற்றும் ஓடிடி இயங்குதளமான வூட் (VOOT) உட்பட 38 சேனல்களை இயக்கி வருகிறது.
போதி ட்ரீ சிஸ்டம்ஸ், இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளத்தை கூட்டாக உருவாக்கி, இந்திய ஊடக பரப்பை "ஸ்ட்ரீமிங்-ஃபர்ஸ்ட்" அணுகுமுறைக்கு மாற்றுவதற்கு முன்னோடியாக, Viacom18ல் ரூ.13,500 கோடி முதலீடு செய்ய முதலீட்டாளர்களின் கூட்டமைப்புடன் நிதி திரட்டுகிறது.
தொலைக்காட்சி, OTT, திரைப்பட விநியோகம் உள்ளிட்டவைகளில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முழுச் சொந்தமான துணை நிறுவனமாக, ரிலையன்ஸ் பிராஜக்ட்ஸ் நிறுவனம் ரூ.1,645 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இந்த புதிய கூட்டணி குறித்து பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, “ஜேம்ஸ் மற்றும் உதய்யின் சாதனைகள் ஒப்பிட முடியாதவை. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஊடக சுற்றுச்சூழல் அமைப்பை வடிவமைப்பதில் அவர்கள் மறுக்க முடியாத பங்கைக் கொண்டிருந்தனர்.
போதி ட்ரீ சிஸ்டம்ஸூடன் கூட்டு சேர்ந்து, ஸ்ட்ரீமிங்-முதல் மீடியா சந்தைக்கு இந்தியாவை மாற்றுவதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டாண்மை மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சேவைகளை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.