Home /News /business /

பவர் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியிலும் கால் பதிக்கவுள்ள ரிலையன்ஸ் நிறுவனம்!

பவர் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியிலும் கால் பதிக்கவுள்ள ரிலையன்ஸ் நிறுவனம்!

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

உலக அளவில் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, குறைந்த செலவில் உலக தரமிக்க பாதுகாப்பான மின் சாதனங்களை உருவாக்குவோம் என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    பவர் எலெக்ட்ரானிக்ஸ் மின் சாதங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை ஆற்றலை உற்பத்தி செய்யும் மின் சாதனங்களுக்கு தேவையான பவர் எலெக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை தயாரிக்க இந்த முன்னெடுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இது பசுமை ஆற்றலை தயாரிக்க தேவையான உபகரணங்களை குறைந்த விலையிலும் அதிக நம்பகத்தன்மையிலும் உருவாக்க பயன்படும். பசுமை ஆற்றல் என்பது சுற்றுச்சூழலை பாதிக்காமல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது என பொருள்.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்ட மாநாட்டில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி உரையாற்றினார். அதில் பேசிய அவர், "பவர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மென்பொருள் அமைப்புகளை வடிவமைப்பதிலும் அதனை தயாரிப்பதிலும் நாங்கள் முனைப்புடன் இருக்கிறோம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைதொடர்பு, க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ஐஓடி தளங்களை மேம்படுத்த இந்த முன்னெடுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என தெரிவித்தார்.

    இதையும் படிக்க: குறைந்த விலையில் 5ஜி ஃபோன் அறிமுகம் - ரிலையன்ஸின் புதிய அறிவிப்பு!

    இதற்காக உலக அளவில் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, குறைந்த செலவில் உலக தரமிக்க பாதுகாப்பான மின் சாதனங்களை உருவாக்குவோம் என தெரிவித்தார்.

    சூரிய ஒளி மின்சாரம் மட்டுமின்றி, பயோ எனர்ஜி, காற்றாலை மின் உற்பத்தி போன்றவற்றிலும் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னேற்றம் அடைந்து வருகிறது எனவும் முகேஷ் அம்பானி தனது உரையில் குறிப்பிட்டார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Electricity, Mukesh ambani, Reliance AGM 2022

    அடுத்த செய்தி