இந்தியாவின் ஐம்பது ஆண்டுகள் பழமையான குளிர்பான பிராண்டான கேம்பாவை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம்.
இந்தியாவின் முக்கியமான பல்துறை வர்த்தக நிறுவனம் என்றால் அது ரிலையன்ஸ் நிறுவனம் தான். பெட்ரோலிய பொருட்கள் முதல் உணவுப் பொருள் வணிகம் வரை அந்த நிறுவனம் கிளை பரப்பாத துறைகளே இல்லை எனலாம். அனைத்திலும் மிக வெற்றிகரமான நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் கோலோச்சி வருகிறது.
தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் கேம்பா கோலா என்னும் இந்தியாவிகன் மிகப் பழமையான குளிர்பான பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. கேம்பா கோலா, கேம்பா ஆரஞ்சு மற்றும் கேம்பா லெமன் என மூன்று ஃபிளேவர்களில் இந்த பானங்கள் அறிமுகமாகியுள்ளன. கேம்பா குளிர்பானம் இந்தியாவில் கோகோ மற்றும் பெப்சி உள்ளிட்ட முன்னனி குளிர்பான பிராண்டுகளுக்கு கண்டிப்பாக பெரும் போட்டியாக இருக்கும். 'தி கிரேட் இந்தியன் டேஸ்ட்' என்ற பெயரில் இந்த குளிர் பானங்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஐம்பது ஆண்டு பழமையான குளிர்பான பிராண்டான கேம்பாவை ரிலையன்ஸ் நிறுவனம் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதை புதிய தலைமுறை நுகர்வோர் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என தாம் நம்புவதாகவும், சந்தையில் கேம்பாவுக்கான வரவேற்பு சிறப்பான முறையில் இருக்கும் என்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
200, 500 மற்றும் 600 மில்லி பேக்குகள் தவிர, 1 மற்றும் 2 லிட்டர் பேக்குகளிலும் கேம்பாவை விற்பனை செய்யவிருக்கிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் தொடங்கி இந்தியா முழுவதும் ரிலையன்ஸ் நிறுவனம் கேம்பாவை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 1970-களில் இந்தியாவின் முன்னனி குளிர்பான பிராண்டாக அறியப்பட்டது கேம்பா மட்டும் தான். உலகமயமாக்கல் கொள்கை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களான கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதித்தன. அதன்பிறகு கேம்பாவின் மார்க்கெட் சரியத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை இந்திய குளிர்பான சந்தையை கோகோ கோலா மற்றும் பெப்சி என்ற இரண்டு நிறுவனங்கள் தான் ஆண்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் வர்த்தன ஜாம்பவானான ரிலையன்ஸ் நிறுவனம் கேம்பாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்துறைகளில் முதலீடு செய்து மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் நிறுவனம் FMCG எனப்படும் அதிவேக நுகர் பொருட்கள் துறையில் கால் பதித்து, நல்ல தரமான குளிர்பானத்தை கட்டுபடியாகும் விலையில் இந்திய வாடிக்கையாளர்களக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவின் பழைய குளிர்பான பிராண்டான கேம்பாவை இந்தியாவில் களமிறக்கியுள்ளது. வரும் கோடை காலத்தில் கேம்பா குளிர்பானங்கள் நாடு முழுவதும் இந்தியர்களின் தாகம் தீர்க்கும் என்பது உறுதி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Carbonated Drinks, Reliance, Soft Drinks