அமெரிக்காவை சேர்ந்த சான்மினா என்ற நிறுவனம், எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறையில் சுமார் 40 ஆண்டுகால அனுபவம் கொண்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்துடன், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வர்த்தக ரீதியாக இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் மற்றும் சான்மினா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் உள்கட்டமைப்பு, தகவல் தொடர்புகள், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் ஆகிய துறைகளில் 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளன.
முன்னதாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடுகளை அதிகம் செய்து வந்தது. தற்போது இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி துறை மீது அந்த நிறுவன்ம் கண் வைத்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அதன் துணை நிறுவனமும், சான்மினா நிறுவனமும் இணைந்து எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் ஈடுபட உள்ளனர். இதற்காக, இருவரும் சேர்ந்து செய்யவிருக்கும் முதலீடு இந்திய மதிப்பில் ரூ.1,500 ஆகும். சான்மினா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அடுத்த சில நிமிடங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 0.3 சதவீதம் அதிகரித்தது.
ரிலையன்ஸ் - சான்மினா முதலீடு அளவு எவ்வளவு?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘ரிலையன்ஸ் ஸ்ட்ராடெஜிக் பிஸ்னஸ் வென்ட்சர்ஸ்’ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்கிறது. கூட்டு முதலீட்டில் இந்த நிறுவனம் அதிகப்படியான முதலீடுகளை கொண்டிருக்கும். அதாவது ரிலையன்ஸ் நிறுவனம் 50.1 சதவீத முதலீட்டையும், சான்மினா கார்ப்பரேஷன் நிறுவனம் 49.9 சதவீத முதலீட்டையும் கொண்டிருக்கும். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவில் ஏற்கனவே உள்ள சான்மினாவின் நிறுவனத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.
also read | பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சோசியல் மீடியா பிரபலம் கிலி பால்!
பெருமிதம் கொள்ளும் ரிலையன்ஸ் நிறுவனம் :
சன்மினா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருப்பது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இதுகுறித்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், “இந்தியாவில் உயர்தர தொழில்நுட்பத்திற்கு உள்ள தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சான்மினா நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தியை தொடங்க இருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
புதிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு ஏதுவாக, தொலைத்தொடர்பு துறையில் எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, ஐடி, டேடா சென்டர்ஸ், கிளவுட், 5ஜி, புதிய எரிசக்தி ஆகிய துறைகளில் நாம் தன்னிறைவு பெறுவது அவசியமாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.
also read | உக்ரைன் எல்லையை விட்டு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்: வெளியுறவுத்துறை அமைச்சகம்
கூட்டு தயாரிப்பில் என்ன உற்பத்தி நடைபெற இருக்கிறது :
5ஜி தொலைத்தொடர்பு, டேட்டா சென்டர்ஸ் மற்றும் சுகாதார துறை, பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் ஆகிய துறைகளில் தேவைப்படும் உயர் தொழில்நுட்ப ரீதியிலான உள்கட்டமைப்பு ஹார்டுவேர்களை சான்மினா நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.