Home /News /business /

ருவைஸ் கெமிக்கல்ஸ் திட்டம்: பங்குதாரர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரிலையன்ஸ், TA'ZIZ நிறுவனம்!

TA'ZIZ இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக, அபிதாபி நேஷனல் ஆயில் நிறுவனம் (ADNOC) மற்றும் ADQ நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் குழுமமும் முதலீடு செய்யவுள்ளது.

    அபுதாபி கெமிக்கல்ஸ் டெரிவேடிவ்ஸ் நிறுவனம் RSC Ltd (TA'ZIZ) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), TA'ZIZ EDC & PVC திட்டத்திற்கான முறையான பங்குதாரர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

    ரிலையன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாகவும், அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் ADQ, அபுதாபியை தளமாகக் கொண்ட முதலீடு மற்றும் ஹோல்டிங் நிறுவனமான TA'ZIZ EDC & PVC உடன் ஒரு மூலோபாய பங்குதாரராகவும் உள்ளது.

    TA'ZIZ இண்டஸ்ட்ரியல் கெமிக்கல் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக, அபிதாபி நேஷனல் ஆயில் நிறுவனம் (ADNOC) மற்றும் ADQ நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் குழுமமும் முதலீடு செய்யவுள்ளது.

    இந்த இணைப்பின் மூலம் இந்த கூட்டணியானது குளோர் - ஆல்கலி, எத்திலீன் டைகுளோரைடு(EDC) மற்றும் பாலிவினைல் குளோரைடு (PVC) உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யவுள்ளது. இந்த கெமிக்கல்கள் முதல் முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு புதிய வருவாய் மற்றும் வாய்ப்புகளை கொடுக்கும்.

    இந்த ஒப்பந்தம் குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறும்போது, TA'ZIZ EDC மற்றும் PVC கூட்டு முயற்சியானது விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கூட்டு முயற்சியானது இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவுகளுக்கு ஒரு சான்றாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    அபுதாபியில் இருக்கும் அல் ருவைஸ் பகுதியில் இருக்கும் தொழிற்பேட்டையில் இந்த TA'ZIZ ஆலை அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Reliance

    அடுத்த செய்தி