Home /News /business /

ரிலையன்ஸ் நிறுவனம் - TA’ZIZ கூட்டு: ரூ.7,500 கோடி மதிப்பிலான ரசாயன திட்டங்களை ருவைஸில் தொடங்குகின்றன

ரிலையன்ஸ் நிறுவனம் - TA’ZIZ கூட்டு: ரூ.7,500 கோடி மதிப்பிலான ரசாயன திட்டங்களை ருவைஸில் தொடங்குகின்றன

ரிலையன்ஸ்- TA'ZIZ

ரிலையன்ஸ்- TA'ZIZ

அபுதாபி கெமிக்கல்ஸ் டெரிவேடிவ்ஸ் கம்பெனி RSC லிமிடெட் (“TA’ZIZ”) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) இணைந்து ருவைஸ் நகரில் உள்ள TA’ZIZ தொழில்துறை ரசாயன மண்டலத்தில் TA’ZIZ EDC & PVC எனப்படும் உலகளாவியல் ரசாயன கூட்டு தயாரிப்பை அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன

மேலும் படிக்கவும் ...
    இந்தியாவில் முன்னணி  நிறுவனமான  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அபுதாபியைச் சேர்ந்த டாசிஸ் (TA’ZIZ ) நிறுவனத்துடன் இணைந்து ரூ.7,500 கோடி (2 Billion dollar) மதிப்பிலான ரசாயன திட்டங்களை ருவைஸ் நகரில் தொடங்கவுள்ளது.

    அபுதாபி கெமிக்கல்ஸ் டெரிவேடிவ்ஸ் கம்பெனி RSC லிமிடெட் (“TA’ZIZ”) மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) இணைந்து ருவைஸ் நகரில் உள்ள TA’ZIZ தொழில்துறை ரசாயன மண்டலத்தில் TA’ZIZ EDC & PVC எனப்படும் உலகளாவியல் ரசாயன கூட்டு தயாரிப்பை அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன.

    புதிய கூட்டு முயற்சியானது குளோர்-ஆல்கலி, எத்திலீன் டிக்ளோரைடு (EDC) மற்றும் பாலிவினைல் ஆகியவற்றை உருவாக்கும் வகையில் கட்டப்பமைக்கப்படும். இதற்காக 2 பில்லியன் டாலருக்கு மேலாக (இந்திய மதிப்பில் ரூ.7,500 கோடி) முதலீடு செய்யப்படவுள்ளது. இத்தகைய ரசாயன உற்பத்தி ஐக்கிய அரபு அமீரகத்தில் முதன்முதலாக உற்பத்தி செய்யப்படவுள்ளது.

    இதன் மூலம் இறக்குமதி குறைந்து, புதிய உள்ளூர் மதிப்புச் சங்கிலிகள் உருவாக்கப்படும். அதேசமயம்,  சர்வதேச அளவில் இத்தகைய ரசாயனங்களுக்காக வளர்ந்து வரும் தேவையையும் பூர்த்தி  செய்ய முடியும்.  . TA'ZIZ இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் மண்டலம் என்பது அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) மற்றும் ADQ இடையேயான கூட்டு முயற்சி ஆகும்.

    இந்த திட்டம் ADNOC மற்றும் ரிலையன்ஸின் நீண்டகால மூலோபாய கூட்டாண்மையை உருவாக்குகிறது. மேலும்,  MENA ( Middle East and North Africa.)  பகுதியில் ரிலையன்ஸின் முதல் முதலீடு இந்த திட்டமாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் ADNOC நிர்வாக இயக்குனர் சுல்தான் அஹ்மத் அல் ஜாபர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், திரு. முகேஷ் டி. அம்பானி ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்த திட்டம் தொடர்பாக  சுல்தான் அஹ்மத் அல் ஜாபர் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியா இடையே வலுவான மற்றும் ஆழமாக வேரூன்றிய இருதரப்பு உறவுகள் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடனான இந்த மூலோபாய கூட்டாண்மை உருவாகியுள்ளது.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்து இந்த புதிய கூட்டு முயற்சியில் செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
    ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதன்முறையாக முக்கியமான தொழில்துறை மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் திட்டமாக இது உள்ளது.  அடுத்த 50 ஆண்டுகளில்  பொருளாதார மாற்றத்திற்காக தொழில்துறையை பலப்படுத்தும்  எங்களின் யுத்திக்கு இந்த திட்டம் உருதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    இத்திட்டம் குறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் TA'ZIZ ஆகியவற்றுக்கு இடையேயான இந்த கூட்டு முயற்சி
    இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான நீண்டகால மற்றும் மதிப்புமிக்க உறவை மேலும் உறுதிப்படுத்தும்.  இரசாயனங்களுக்கான உலகளாவிய மையமாக உருவாக்கப்படுகிற  ஐக்கிய அரபு எமிரேட்ஸின் TA'ZIZ  தொழில்துறை ரசாயன மண்டலத்தில் எங்களின் முதல் திட்டங்களை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

    இந்தியாவில் பாலிவினைல் குளோரைடுக்கான (PVC )தேவை மற்றும்  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமாக உள்ள அவரின் மூலப்பொருள் ஆகியவை இரு நிறுவனங்களுக்கும் வெற்றி-வெற்றி கூட்டாண்மையை வழங்குகிறது என்று தெரிவித்தார்.

    ரசாயனங்கள் பரந்த அளவிலான தொழில்துறை பயன்பாடுகளைக் கொண்டுள்ளன, உள்ளூர் விநியோகச் சங்கிலிகளை செயல்படுத்துகின்றன. மேலும்  ஏற்றுமதி சந்தைகளில் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்கிறது.  அலுமினா சுத்திகரிப்பு செயல்முறைக்கு முக்கியமானதான காஸ்டிக் சேடா  உற்பத்தியை குளோர்-ஆல்காலி  செயல்படுத்துகிறது.
    EDC என்பது PVC உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. இந்த PVC
    குழாய்கள், ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறை மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

    Chlor-Alkali, EDC மற்றும் PVC ஆகியவற்றின் உற்பத்தி
    தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள இலக்கு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொழில்துறை வளர்ச்சி உத்திக்கு இரசாயனங்கள் ஒரு முன்னுரிமைத் துறையாகும்
    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொழில்துறையை உயர்த்துவதை இலக்காகக் கொண்ட தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சகம் 2031 ஆம் ஆண்டிற்குள் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பை  AED300 பில்லியனாக உயர்த்த இலக்கு வைத்துள்ளது.

    TA'ZIZ சமீப காலத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற விருப்பத்தில் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.  TA'ZIZ மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது, அவற்றில் முதலாவது தொழில்துறை இரசாயனங்கள் உற்பத்தியை நடத்தும் இரசாயன மண்டலம்.  இது ஏற்கனவே ஏழு உலக அளவிலான திட்டங்களை கொண்டுள்ளது. இரண்டாவது, ஒரு இலகுரக தொழில்துறை மண்டலம். இது இரசாயன மண்டலத்தின் வெளியீடுகளை நுகர்பொருளாக மாற்றும். முன்றாவது,TA'ZIZ தொழிற்துறை மண்டலங்களுக்கு தேவையான சேவைகளை வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் கொண்ட தொழிதுறை சேவை மண்டலம்.

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) பற்றி
    ரிலையன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமாகும். 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிந்த நிதியாண்டில் இதன் ஒருங்கிணைக்கப்பட்ட விற்றுமுதல்  5,39,238 கோடி ரூபாய்,  நிதி லாபம்  79,828 கோடி ரூபாய், நிகர லாபம் 53,739 கோடி ரூபாய்.

    ரிலையன்ஸின் செயல்பாடுகள் ஹைட்ரோகார்பன்
    ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல், பெட்ரோ கெமிக்கல்ஸ், சில்லறை விற்பனை மற்றும் டிஜிட்டல் சேவைகள் வரை பரவியுள்ளது.

    பார்ச்சூனின் குளோபலின் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கான 500 நிறுவனங்களை கொண்ட பட்டியலில்  இந்தியாவில் இருந்து சிறந்த இடத்தில் இடம்பெற்ற நிறுவனம் ரிலையன்ஸ் ஆகும். 2021 ஆம் ஆண்டிற்கான "உலகின் மிகப்பெரிய பொது நிறுவனங்களுக்கான  போர்ப்ஸ் குளோபல் 2000 தரவரிசையில் இந்நிறுவனம் 55வது இடத்தில் உள்ளது.  இந்த பட்டியலில் இந்திய நிறுவனங்களில் முதன்மை இடத்தில் ரிலையன்ஸ் உள்ளது. LinkedIn இன் ‘இந்தியாவில் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள்’ (2021) பட்டியலிலும் ரிலையன்ஸ் இடம் பிடித்துள்ளது.

    TA'ZIZ பற்றி
    அரபு மொழியில், TA'ZIZ என்றால் முன்னேற்றம், பலப்படுத்துதல் அல்லது அடித்தளத்தை உருவாக்குதல் என்று பொருள். ருவாய்ஸ் தொழில்துறை வளாகம் மற்றும் அபுதாபியின் ரசாயனங்கள், மேம்பட்ட உற்பத்தி மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியை உருவாக்கும், ஆதரிக்கும்ஒரு தொழில்துறை
    சேவைகள் மற்றும் தளவாட சுற்றுச்சூழல் அமைப்பு ஆகும்.
    மேலும் தகவலுக்கு: www.taziz.com ஐப் பார்வையிடவும்.




    ADNOC பற்றி

    ADNOC  அபுதாபியின் எமிரெட்ஸுக்கு சொந்தமான ஒரு முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட ஆற்றல் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் குழுமம் ஆகும். ADNOC இன் நோக்கம் எமிரேட்டின் பரந்த ஹைட்ரோகார்பனின் மதிப்பை அதிகரிப்பதாகும்.. மேலும் அறிய, பார்வையிடவும்: www.adnoc.ae


    ADQ பற்றி
    2018 இல் அபுதாபியில் நிறுவப்பட்ட ADQ உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் நேரடி மற்றும் மறைமுக முதலீடுகளுடன் , பிராந்தியத்தின் மிகப்பெரிய ஹோல்டிங் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. அபுதாபி அரசாங்கத்தின் மூலோபாய பங்காளியாக,
    எமிரேட்டை உலகளாவிய போட்டியாக
    மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரமாக  மாற்றுவதை துரிதப்படுத்த ADQ உறுதிபூண்டுள்ளது.


    Published by:Murugesh M
    First published:

    Tags: Reliance

    அடுத்த செய்தி